Yaman Movie Review

விஜய் ஆண்டனி பொதுவாக கதைகளை தேர்ந்தெடுப்பதிலும் சரி, நடிப்பதிலும் சரி படத்திற்க்கு படம் வித்தியாசம் காட்டுவார். அதேபோல் தான் நடிக்கும் படங்களின் தலைப்புகளும் ஒரு வித்தியாசம் காணப்படும். பிச்சைகாரன், சைத்தான் அந்த வகையில் தற்போது ஒரு அரசியல்வாதியாக எமன் படத்தில் நடித்திருக்கிறார். எமன் இதற்கு முன் வந்த விஜய் ஆண்டனி படங்களில் எப்படி வித்தியாசப்பட்டுள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

அவரவர் செய்த செயலுக்கான பலன்களை அவரவர்கள்தான் அனுபவிக்க வேண்டும்  இதுதான் கர்மா என்பதுதான் இப்படத்தின் மையகதை.  சைத்தான் படத்தை போலவே இதிலும் அப்பா, மகன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தை இப்படத்தில் செய்துள்ளார். படத்தின்  அப்பாவாக வரும் நம்பி சில அரசியல் சூழ்ச்சிகளால் ஆரம்பத்தில்  கொல்லப்படுகிறார். பின்னாளில் மகனாக வரும் தமிழரசன் எதிர்பாராத சில காரணங்களால் தியாகராஜனுடன் சேர்ந்து தன் அப்பாவை போலவே அரசியலில் இறங்க, இதற்கிடையில் படத்தில் ஒரு நடிகையாக வரும் மியா ஜார்ஜிக்கும், விஜய் ஆண்டனிக்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் தன் அப்பாவிற்க்கு ஏற்பட்ட அதே சிக்கல் இவருக்கும் ஏற்பட இறுதியில் இந்த சூழ்ச்சிகளை எப்படி வென்றார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் வித்தியாசம் காட்டும் விஜய் ஆண்டனி இந்த படத்திலும் ஒரு வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். குறிப்பாக சொல்ல்வேண்டுமென்றால் ஒரு அரசியல் வாதியாகவே மாறியிருக்கிறார். தன்னுடைய அரசியல் எதிரிகளுடன் இவர் விளையாடும்  ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருக்கிறது.

தியாகராஜன் சில வருடங்களாக திரைபடங்களில் நடிக்காமல் இடைவிட்டிருந்து இப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார், இவரும் ஒரு அரசியல் வாதியாகத்தான் வருகிறார். குறிப்பாக இவரின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டுமென்றால் படத்தின் இறுதியில் இவருக்கும், விஜய் ஆண்டனிக்கும் நடக்கும் ஒரு பேச்சுவார்த்தை கைத்தட்டல்களை அல்லுகிறது.

படத்தின் கதாநாயகியாக வரும் மியா ஜார்ஜ் இப்படத்திலும் ஒரு கதாநாயாகியாகத்தான் நடித்துள்ளார் வழக்கமாக நடித்த படங்களில் நடித்தது போல் இல்லாமல் இந்த படத்தில் கொஞசம் புதுமையாக நடித்துள்ளார்.

தங்க பாண்டியனாக வரும் மற்றொரு வில்லனை பற்றி சொல்லியே ஆக வேண்டும், படத்தின் முடிவில் இவர்  கூறும் ஒரு வசனம் அனைவரையும் கைத்தட்ட வைக்கிறது. இவர்களை தவிர சார்லி, சங்கிலி முருகன், சுவாமிநாதன், மாரிமுத்து என அனைவரும் படத்தின் கதாபாத்திரத்திற்க்கு பொருந்தும் வகையில் தங்களுடைய நடிப்பை வெளிபடுத்தியிருக்கின்றனர்.

இப்படத்தின் நிறைகள் என்னவென்றால் படம் ஆரம்பம் முதல் முடிவு வரை கதைக்கலத்தை விட்டு நகராமல் இருந்தது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அமைந்தது. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தின் பின்னனி இசை.

இப்படத்தின் குறைகள் என்னவென்றால் விஜய் ஆண்டனியின் படங்களை பொறுத்தவரையில் பாடல்களுக்கு கொஞ்சம் முக்கியதுவம் இருக்கும் இதில் பாடல்களில் இன்னும் கொஞசம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் எமன் இதற்கு முன் வந்த விஜய் ஆண்டனியின் படங்களில் எப்படி ஒரு வித்தியாசம் இருந்ததோ இப்படத்திலும் ஒரு வித்தியாசம் இருப்பதால் அனைவரும் சென்று திரையரங்கில் பார்க்கலாம்.

7.5

Good

Story - 7.5
Screenplay - 7.5
Direction - 7.5
Music - 7.5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*