ஒருவரிக்கதை:

இண்டர்நேஷனல் உளவாளியாக வரும் அஜித், தீவிரவாதிகளின், ரகசிய ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து இந்தியா நாட்டை பாதுக்காக்கும் முயற்சியில், அவரது டீமில் இருக்கும் நண்பர்களின் துரோகத்தாலேயே சாகும் நிலைக்கு ஆளாகிறார். அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார், தனது மிஷினை வெற்றிகரமாக முடித்தாரா ? இல்லையா ? என்பது தான் விவேகம் படத்தின் கதை.

விமர்சனம்:

உளவாளியாக வரும் அஜய் குமார் சர்வதேச கூலிப்படைகளின் கொடூர தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் மிஷினில் களமிறங்குகிறார். இதற்கிடையில் பணத்திற்கு விலைபோன அஜய் குமாரின் நண்பனாக வரும் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களின் சதியில் மாட்டிக் கொள்கிறார், அஜய் குமார். இதிலிருந்து அவர் மீண்டு தடை பல கடந்து அஜீத் .,விவேக் ஒபராய் மற்றும அவர் பின்னணியில் இருக்கும் சதிகாரர்களை அஜீத் பந்தாடி தேசத்தையும் தன்னையும் காத்துக் கொண்டாரா? என்பது தான் “விவேகம் ” படத்தின் கதை.

விவேகம் படத்தின் ஒட்டுமொத்த தூணாக இருக்கிறார், தல அஜித் குமார். படத்தின் அனைத்து ஆக்ஷன் காட்சிகளுக்கும் டூப் இல்லாமல் மிகவும் ரிஷ்க் எடுத்து, டெடிகேஷனுடன் பண்ணியிருக்கிறார். படத்தில் அக்ஷரா ஹாசனும், கருணாகரனும் வரும் காட்சிகள் மிகக் குறைந்த அளவே என்றாலும், தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். காஜல் அகர்வால் – அஜித்தின் கெமிஷ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இருப்பினும் சில சமயங்களில், ஒரு ஸ்பை திரில்லர் படத்திற்கான வேகத்தை குறைத்து திசைத்திருப்பவது போல் உள்ளது.

அஜித்திற்கு இணையான வில்லனாக விவேக் ஓபராயின் நடிப்பு பாராட்டுக்குறியது.

நிறைகள்:

1. அஜித் குமார் படத்தின் Core ஆக இருந்து படத்தை தாங்கி பிடித்துள்ளார்.
2. அக்ஷாரா ஹாசன் வரும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.
3. அனிரூத் இச. பின்னனி இசையிலும் சரி, மனதை மயக்கும் மெலோடியிலும் சரி பட்டையை கிளப்பியிருக்கிறார்.
4. வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒவ்வொரு ஃப்ரேமிலும் இதுவரை நாம் கண்டிராத அஜித்தை மிக அழகாக காட்டியுள்ளார்.

படத்தின் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். அழகனான லொக்கேஷன் படத்தில் இருந்தாலும், படத்தின் சண்டைக் காட்சிகளும், நல்ல முறையில் வந்திருந்தாலும் படத்தின் எடிட்டிங் அதீத வேகத்தில் செல்வதால் அதை ரசிக்க முடியவில்லை.

மொத்தத்தில் விவேகம், தல ரசிகர்களுக்கான சிறப்புக் கொண்டாட்டம்.[/vc_column_text][/vc_column][/vc_row]

7.5

Good

Story - 7
Screenplay - 6
Direction - 7
Artist - 8
Music - 8
Cinematography - 8
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*