விஷால் – லிங்குசாமி வெற்றி கூட்டணியில் சண்டைக்கோழி 2 பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கதா நாயகனாக நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. நடிகர் விஷாலின் தொடக்க கால திரைப்பயணத்தில் சண்டைக்கோழி அவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது என்றே கூறலாம்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றிக் கூட்டணி, விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் சண்டைக்கோழி 2 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. மேலும் படத்தின் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பும் இன்று முதல் துவங்குகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷால் கதா நாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – சக்தி
தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*