கதைக்கரு:
வேலையில்லா பட்டதாரியின்
முதல் பாகத்தை போன்றே கார்ப்பரேட் கம்பெனியால் பாதிப்பிற்குள்ளாகும் வாலிபர், தடைகளை தாண்டி எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே வேலையில்லா பட்டதாரி படத்தின் கதை.

விமர்சனம்:
முதல் பாகத்தில் தனது ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்த ரகுவரன், ஒரு கட்டத்தில் படத்தின் வில்லியாக வரும் வசுந்தராவின் சூழ்ச்சியால் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அதன் பின் சொந்த கம்பெனி தொடங்கும் ரகுவரன் எப்படி ஜெயிக்கிறார் என்பதை  ஒரு பக்கா எண்டர்டெய்ன்மெண்ட் கதையாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

நிறைகள்:

1.தனுஷின் மாஸ்சான இன்டரோ ஸீன் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.
2. கஜோலின் கதாபாத்திர வடிவமைப்பு.
3. படத்தின் சண்டை காட்சிகளில் அசத்தியிருக்கிறார் தனுஷ்.
4. படத்தின் பின்னணி இசை.
5. தனுஷ் – கஜோல் , தனுஷ்- பாலாஜி மோகன் இவர்களுக்கு இடையேயான காட்சிகள்.
6. கணவன் மனைவி காட்சிகளில் தனுஷிற்கு இணையாக நடித்திருக்கிறார் அமலா பால்.

படத்தின் இரண்டாம் பாதி சற்று மெதுவாக நகர்வது படத்திற்கு சிறிய பின்னடைவாக இருந்தாலும், காமெடி, காதல், சண்டை என கமர்ஷியல் காட்சிகளுடன் ரகுவரன் மீண்டும் வெற்றி நடைபோடுகிறார்.

மொத்தத்தில் விஐபி முதல் பாகத்தை போன்றே இப்படமும் இளைஞர்களுக்கும், பேமிலி ஆடியன்ஸ்க்கும் பிடித்த படமாக விஐபி-2 இருக்கிறது.

8.1

Great

Story - 8
Screenplay - 8
Direction - 8
Artist - 8
Music - 8.5
Cinematography - 8
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*