‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ திரைவிமர்சனம் !

கிராமத்தில் அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கும் நாயகனுக்கு திடீரென விண்வெளி டூர் செல்லும் ஆசை வர, அதனால் நடக்கும் அட்ராசிட்டிகளே ‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ திரைப்படம். கதை சுருக்கம்: ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சண்டியர் துரைபாண்டி. இவருக்கு விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை வருகிறுது. அதற்கு சுமார் 25 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால், ஊரில் உள்ள பணக்கார மனிதர்களை மிரட்டி பணம்பறிக்க முயல்கிறார். ‘யாருயா இவன்… கோமாளித்தனமா விண்வெளி போறேன்னு சொல்லி பணம் பிடுங்க பார்க்கிறான்னு…’ கடுப்பாகும் ஊர் பெரிசுகள், துரைபாண்டியை போட்டுத்தள்ள திட்டமிடுகிறார்கள். துரைபாண்டி கொல்லப்பட்டாரா இல்லை அவரது விண்வெளி டூர் லட்சியத்தில் வெற்றி பெற்றாரா என்பதை ஆடம்பரம் இல்லாமல் அசால்டாக சொல்கிறது விண்வெளி பயணக் குறிப்புகள்.

தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி இந்த விண்வெளி பயணக் குறிப்புகள். விண்வெளி என்றவுடன் பிரம்மாண்ட செட் போட்டு, ஸ்பேஸ் ஸ்டேஷன் எல்லாம் அமைக்காமல், கிராமத்து சூழலில் பயணிக்கிறது படம்.
வித்தியாசமான கதை சொல்லல் மூலம் கவனத்தை ஈர்க்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயப்பிரகாஷ். படத்தை எழுதி, இயக்கியது மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அனைத்தையும் தானே செய்து தயாரிப்பாளரின் செலவை குறைத்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் நாயகன் அத்விக் ஜலந்தர். துரைபாண்டியாக அவர் செய்யும் சேட்டைகள், அசல் சண்டியரை நினைவுபடுத்துகிறது. பணப்பசை கொண்டவர்களை மிரட்டி கட்டிங் கேட்டபது, அமைச்சரிடம் புத்திசாலிதனமாக பேசி பணத்தை ஆட்டைய போடுவது என முதல் படத்திலேயே கலக்கி இருக்கிறார்.
இதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ் இதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்
கத்துக்கணும்யா ‘தல’ வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும் கத்துக்கணும்யா ‘தல’ வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்
மீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி?: என்ன கதை சார்? மீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி?: என்ன கதை சார்?

ஹீரோயின் என தனியாக யாரும் இல்லை. கணவனின் கண்முன்னே முன்னாள் காதலனுடன் குடும்பம் நடத்தும் கதாபாத்திரத்தில் பூஜா ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் உட்பட படத்தில் யாருக்குமே மேக்கப் இல்லை. ஹீரோ அத்விக் ஜலந்தர் உள்பட படத்ததில் எல்லாருமே புதுமுகங்கள்; கிராமத்து முகங்கள். நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
‘நம்மாளுங்களுக்கு கம்பு, சோளம் எல்லாம் நல்லதுன்னு சொன்னா வாங்கமாட்டானுங்க… இதையே வேற பேரு வெச்சு வெள்ளக்காரன் பாட்டில்ல அடைச்சு வித்தா வாங்கி, வாங்கி திம்பானுங்க…’ என தனது திட்டத்தை மார்கெட்டிங் செய்ய ஹீரோ பேசும் வசனம் உள்பட படத்தில் ஒரு சில வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
எந்த காட்சியிலும் ஆடம்பரம் இல்லை. அதே நேரத்தில் ஒரு பிரம்மாண்ட ஷார்ட் பிலிம் எடுக்கும் பட்ஜெட், முழு நீள திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இருப்பினும் கதையை சொல்லியிருக்கும் விதம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் செம.

ஆங்காங்கே சின்ன சின்னதாக சில காமெடி காட்சிகள் இருக்கின்றன. நல்ல டார்க் ஹியுமர் சப்ஜெக்ட் என்பதால், இன்னும் கூட காமெடி செய்திருக்கலாம்.
படத்தில் பாடல்கள், அதிரடி ஆக்ஷன்னு எந்த கமர்சியல் மசாலாவும் இல்லை. சின்ன பட்ஜெட்டில் விண்வெளிக்கு செல்ல முயன்றிருக்கிறது இந்த விண்வெளி பயணக் குறிப்புகள். நேரம் கிடைக்கும் போது தியேட்டருக்கு போய் நீங்களும் குறிப்பெடுத்து வரலாம்.

5.3

Average

Story - 6
Screenplay - 5
Direction - 5
Artist - 6
Music - 6
Cinematography - 6
Editing - 6
Stunt - 6
Dance - 6
Art - 6
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*