⁠⁠⁠விக்ரம் பிரபுவின் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பங்கேற்ப்பு

⁠⁠⁠விக்ரம் பிரபுவின் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பங்கேற்ப்பு
விக்ரம் பிரபுவின் ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, படத்தின் இசையினை  வெளியிட்டார். சூப்பர் ஸ்டார் அவர்கள் இசைத் தட்டை வெளியிட, ராம் குமார், பிரபு மற்றும் கிரி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், அன்னை இல்லத்துடனான தம்முடைய உணர்வு பூர்வமான பந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசினார்.

“நான் இரண்டு முறை அன்னை இல்லத்திற்கு வந்துள்ளேன். முதல் முறை நடிகர் திலகம், சிவாஜி கணேசன் அவர்கள் என்னை சாப்பிட அழைத்திருந்தார். அன்று எனக்கு அன்னை இல்லத்தில் சிவாஜி அவர்களுடன் கிடைத்த அனுபவமும்,  நான் சாப்பிட்ட சாப்பாடும் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை. நான் அவர்களுடன் படையப்பா படத்தில் இணைந்து நடித்தேன், மேலும் அண்ணாமலை இரண்டாம் பாகத்தில் நடிக்கும் போது சிவாஜி அவர்களை மனதில் வைத்துக் கொண்டு தான் நடித்தேன். ” என்று கூறினார்.

மேலும் நெருப்புடா படம் பற்றி பேசுகையில், “படத்தின் டிரெய்லர் மிக அருமையாக இருந்தது. கேமரா மேன் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் படமாகும், ஆகவேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இறைவனிடமும் பிரார்த்திகிறேன். இப்படத்தின் வெற்றி விழா இதே அன்னை இல்லத்தில் நடைபெறும் பொழுது, எந்த ஒரு அழைப்பும் இல்லாமல் நான் கலந்து கொள்வேன் அதற்கான உரிமை இந்த இல்லத்தில் எனக்கு உள்ளது.” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*