வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கும் ‘எடக்கு’.

தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் “மக்கள் செல்வன்”  விஜய் சேதுபதி நடிக்கும் ‘எடக்கு’ விரைவில் வெளியாகிறது.

நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் K.பாலு இப்படத்தை தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கிருக்கிறார், எஸ். சிவன்.

‘எடக்கு’ ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டப் படமாக உருவாகியுள்ளது. இதில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை தவசிராஜ் வடிவமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது.

‘எடக்கு’ மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*