வட சென்னையில் படமாகும் வெற்றிமாறனின் வடசென்னை.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் வடசென்னை. இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் கனவுப்படமான இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கவுள்ளார்.
வடசென்னை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வட சென்னை, காசிமேடு பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.  படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சமுத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் தற்போது அவர்கள படப்பிடிப்பு குழுவினருடன் இணைந்துள்ளனர்.
வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிம்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வட சென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயண இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*