இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் , வத்திக்குச்சி திலீபன் நடிக்கும் ‘குத்தூசி’.

தமிழ் திரையுலகில் பல படங்கள் விவசாயம் சார்ந்த படங்கள் பல வெளிவந்திருப்பினும், ‘குத்தூசி’ திரைப்படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் படமாக உருவாகியுள்ளது. படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.

நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என உலகநாடுகள் அறியும். விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பது அரிதாவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும் கூறியிருக்கிறார் இயக்குனர் சிவசக்தி.

காதல், ஆக்‌ஷன், எமோஷன் என கமர்ஷியலாகவும் மக்களுக்கு பிடிக்கும் வகையாக குத்தூசி உருவாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.
இயக்குனர் – சிவசக்தி

இசை – N.கண்ணன்

ஒளிப்பதிவு – பாஹி

பாடல்கள் – கவிஞர் அண்ணாமலை

எடிட்டிங் – J.V மணிகண்ட பாலாஜி

கலை – ஸ்ரீஜெய் கல்யாண்

வசனம் – வீருசரண்

சண்டைகாட்சிகள் – ராஜசேகர்

நடனம் – ராதிகா, சங்கர்

இணை தயாரிப்பாளர் – த.கணேஷ் ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*