“யு டர்ன்” – திரைவிமர்சனம்

படத்தில் சமுக காரை அதோடு ஒரு வித்தியாசமான கதைக்களம் அடேங்கப்பா என்று வியக்கவைக்கும் திரைகதை ஒரு சாலை விபத்தை வைத்து கொண்டு இப்படி ஒரு திரைகதையா என்று பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் பவண்குமார்.

இந்த படம் ஒரு கன்னட ரீமேக் என்று சொன்னால் நம்பிவிர்களா ஆம் இது கன்னடத்தில் தான்முதலில் வந்தது இதை தெலுங்கு மற்றும் தமிழில் இப்போது தயாரித்து வெளியிட்டுள்ளனர்.கன்னடத்தில் இயக்கிய பவண்குமார் தான் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கியுள்ளார் அதனால் தான் சாராம்சம் கொஞ்சமும் குறையாமல் உள்ளது

கதை: சென்னை, வேளாச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன். கற்களை நகர்த்தி வைத்துவிட்டு “யு டர்ன்” எடுப்பவர்களால் ஏகப்பட்டவிபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளில் ஏகப்பட்டோர் உயிர் இழக்க அது பற்றிபிரபல ஆங்கில நாளிதழான “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையில் புதிய நிருபராக பணியில் சேர்ந்திருக்கும்சமந்தா, ஒரு கட்டுரை எழுத ஆய்வில் இறங்குகிறார்.

இந்நிலையில் சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி விட்டு தினமும் “யுடர்ன்” போடும் பத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மர்மமாக மரணமடைகின்றனர். அவர்களது மரணத்திற்கு எல்லாம் காரணம். சமந்தா தான் என சந்தேகிக்கும் “ஆடுகளம்” நரேன் தலைமையிலான போலீஸ் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும்அழைத்துப் போய் விசாரிக்கிறது. ஆனால், அந்த போலீஸ் டீமில் இருக்கும் ஆதி மட்டும் சமந்தா குற்றமற்றவர் என தீர்மானமாக நம்பி அவருக்கு உதவுகிறார்.

சமந்தா குற்றமற்றவரா? தொடர் கொலைகளுக்கு காரணம் யார்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது “யுடர்ன் ( UTURN )” படத்தின் மீதிக் கதையும், களமும்!

காட்சிப்படுத்தல்: சமந்தா அக்கினேனி, ஆதி பினி செட்டி, ராகுல் ரவீந்திரன், நரேன், “ஆடுகளம்” நரேன், பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் நடிக்க பவண்குமார் இயக்கத்தில் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு தயாரிப்பில் கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் கோ. தனஞ்செயன் வெளியீடு செய்ய க்ரைம், த்ரில்லர் & ஹாரர் படமாக வெளிவந்திருக்கும் “யுடர்ன் ( UTURN )” படத்தில் சஸ்பென்ஸ் காட்சிகளும், ஹாரர் காட்சிகளும்காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சூப்பர்ப் மிரட்டல் இது தமிழ் சினிமா வுக்கு முற்றிலும் புதிய கோணம் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

கதையின் நாயகி : சமூக அக்கறையுடன் கூடிய பரபரப்பு கட்டுரைகளுக்காகஅலைந்து திரியும் பிரபல ஆங்கில நாளிதழான “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையின் இளம் பெண் நிருபராக , கதையின் நாயகியாக .சமந்தா அக்கினேனி , அதாங்க நம்ம சமந்தா பொண்ணு செம சமத்தாக ,சதா சர்வ நேரமும் முகத்தில் கலவரத்துடனும் , உடம்பு முழுக்க தனக்கே உரியகவர்ச்சியுடனும் படத்திற்கும் தான் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். வாழ்த்துக்கள் சமந்தா!

சமந்தாவும் நயன்தாரா பாதையில் பயணிக்க துடங்கியுள்ளார் அதன் முதல் படி மிகவும் நேர்த்தியான படி என்று தான் சொல்லனும் திருமணத்துக்கு பின் ஆட்டம் பாடம் இல்லாமல் தொடர்ந்திந்த மாதிரியான கதைகளை தேர்ந்த்டுத்து நடித்தால் நிச்சயம் மிக பெரிய பேர் கிடைக்கும் அதோடு இந்தவருடத்தின் சிறந்த நடிகைகனா விருதுக்கு முழு தகுதியும் பெறுகிறார் .

கதை நாயகர்கள் : சமந்தாவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக, முதல் நாயகர் “மிருகம் “ஆதி பினிசெட்டி , மிரட்டியிருக்கிறார் மிரட்டி.

சமந்தாவிடம் காதலை சொல்லாதகாதலராக, மற்றொரு நாயகராகஅவர் வேலை பார்க்கும் அதே “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையில் சீனியர் க்ரைம் நிருபராக வேலை பார்க்கும் ராகுல் ரவீந்திரனின் நடிப்பும், துடிப்பும் கூட ரசனை.

பிற நட்சத்திரங்கள் : தன் குடும்பம் விபத்தில் பலியாகதானே காரணமான நரேன், எப்பேற்பட்ட வழக்கையும், எப்படியாவது முடித்து வைக்க முயலும் போலீஸ் அதிகாரியாக “ஆடுகளம்” நரேன், மகளை அநியாயமாக விபத்தில்இழந்த பூமிகா சாவ்லா உள்ளிட்ட எல்லோரும் கனமான பாத்திரங்களில் கவனமாக நடித்து அசத்தியுள்ளனர்.

தொழில்நுட்பகலைஞர்கள் : கவின் பாலாவின் வசனவரிகள் , சுரேஷ் ஆறுமுகத்தின் பின் பாதி ஷார்ப் -படத்தொகுப்பு , நிக்கேத் பொம்மி ரெட்டியின் அழகிய கதைக்கு தேவையான லைட்டிங்குடன் கூடிய ஒளிப்பதிவு, பூர்ண சந்திர தேஜஸ்வியின் மிரட்டல் இசை … உள்ளிட்டவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.

பலம் : இப்பட நாயகி சமந்தாவும் , இப்படத்தின் வெளியீட்டை “பாப்டா புளு ஒசியன் பிலிம் & டெலி விஷன் அக்கடமியின் உரிமை யாளரும் , கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் நிர்வாகியுமானகோ.தனஞ்செயன் சிறப்பாக செய்து வருவதும் பெரும் பலம்.

இயக்கம் : பவண்குமார் இயக்கத்தில் ., முதல் பாதி கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ., இரண்டாம் பாதி , கதையிலும்எதிர்பாராத எக்கச்சக்க “யுடர்ன் ( UTURN ) ” களுடன் ., க்ரைம் , த்ரில்லர் , ஹாரர் ரசிகர்களை செமயாக கவரும் படி படமாக்கப்பட்டு ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போட்டு விடுகிறது என்பது பெரிய ப்ளஸ்!

அதே மாதிரி , “அப்பாவை ஒன்னும் பண்ண வேணாமா….” என தங்கள் சாவுக்கு காரணமான தந்தையை ., தன் தாய் மாயா – பூமிகாவின் ஆவியிடம் காப்பாற்ற உருகும் மகள் ஆர்னாவின் ஆவி., மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. அதே மாதிரி 13வது மாடியில் இருந்து …. மனைவியும் , மகளும் சாக காரணமாகி விட்டோமே …. என தற்கொலை செய்யும் முடிவோடு விழும் நரேனையும் உயிர் பிழைக்க வைக்கும் ஆவி பூமிகாவும்
இயக்குனரின் திறமைக்கு கட்டியம் கூறுகின்றனர்.

பைனல்” பன்ச் ” : மொத்தத்தில் ., க்ரைம் , த்ரில்லர் , ஹாரர் , சஸ்பென்ஸ் …படங்களை பிடிக்கும்ரசிகர்களை “யுடர்ன் ( UTURN ) ‘ திரைப்படம் -திரும்ப திரும்ப, தியேட்டருக்கு ” யு டர்ன் ( UTURN ) ‘அடிக்க வைக்கும்!”

6.8

Fair

Story - 8
Screenplay - 8
Direction - 7
Artist - 8
Music - 7
Cinematography - 8
Editing - 8
Stunt - 7
Dance - 7
Art - 7
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*