இந்தவார கோலிவுட்டில் வெளியாகும் படங்கள் – ஒரு அலசல்

வழக்கமாக வெள்ளிக்கிழமை என்றாலே கோலிவுட்டிற்கு மிக மகிழ்ச்சியான தருணம் தான். நேயர்களுக்கும் வாரஇறுதி என்பதால் விடுமுறையில் பொழுதுபோக்க தேர்ந்த்டுக்கும் இடம் திரையரங்கம். பிடித்த நட்சத்திரங்களின் படங்கள், கொண்டாட்டம், ஆர்பாட்டம் என்று ரீலீஸ் அன்று ஒரு திருவிழாவை நடத்திவிடுகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் கோலிவுட் களம் சற்று மாறுபட்ட தளத்தைக் கொண்டுள்ளது.

2017 ஆம் வருடத்தின் முதல் முறையாக கதை மற்றும் கருத்தினை மையமாக கொண்ட படங்கள் மட்டுமே இந்த வாரம் ரீலீஸாகிறது.

பொதுவாக சமூக கருத்தைப் பற்றி பேசும் படங்கள் எவ்வளவோ வெளியாகிய போதும், அவை பெரும்பாலும் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களின் ஆதரவிலோ இல்லை அவர்கள் நடிப்பிலோ வெளிவந்திருக்கின்றன. சில சிறிய படங்கள் கமர்ஷியல் படங்களின் வியாபாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின் வாங்கக் கூடிய சூழ்நிலையும் உண்டு. ஆனால் அதை மீறி, வளர்ந்து வரும் நடிகர்களின் நடிப்பில் வெரும் கதையை மட்டுமே ஹீரோவாக கொண்டு இந்த வாரத்திற்கான படங்கள் கோலிவுட்டில் வெளியாகின்றன.

லென்ஸ்:
ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் ‘லென்ஸ்’ என்ற திரைப்படத்தின் சாராம்சம்.

இன்றைய இளைய சமுதாயமும் நவீன உலகமயமாதலுக்கு அடிமையான மக்களும், பெண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக லென்ஸ் உள்ளது. சமூக வலைத்தளங்களின் அபார சக்தியை அதனால் கிடைக்கும் நன்மையை ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்களின் மூலம் பார்த்த நமக்கு, அதன் மற்றொரு கொடூர முகத்தைக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் லென்ஸ்.

ஜெயபிரகாஷ் ராதகிருஷ்ணன் இயக்கத்தில், மினி ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தில், ஆனந்த் சாமி, மிஷாகோஷல், அஷ்வதிலால் மற்றும் அம்பேத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் வழங்குகிறார்.

எய்தவன்:
சமூகத்தில் தற்போதைய முக்கிய பிரச்சனையாக வலம் வரும் மருத்துவ கல்லூரியின் இன்னொரு முகத்தையும், உயர்கல்வியை கொடுப்பத்தில் ஏற்படும் சிக்கல் குறித்து பேசும் படமாக எய்தவன் உருவாகியுள்ளது.

இயக்குனர் சக்தி ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். கலைஅரசன் மற்றும் சாட்னா டிடஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சக்திவேலன் இப்படத்தை வினியோகம் செய்கிறார்.

சரவணன் இருக்க பயமேன்:

சரவணன் இருக்க பயமேன் இயக்குனர் எழில் இயக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் உதயநிதி, ரெஜினா கேசன்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி மற்றும் ஆர் கே சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை உதயநிதி தனது ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*