திருமணம் விமர்சனம்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வந்துள்ள படம் திருமணம்.

திருமணம் கதையாக பார்த்தால் மிகவும் எளிமையான கதை தான், சேரன் ஒரு நேர்மையான அரசு அதிகாரி. அவருடைய தங்கை காவ்யா சுரேஷ், FM-ல் வேலைப்பார்க்கும் உமாபதியை காதலிக்கின்றார்.

அவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் பிரச்சனை இல்லை என்றாலும், மாப்பிள்ளை வீட்டார் மிகவும் ஆடம் ரமானவர்கள். பெண் வீட்டார் மிடிக் க்ளாஸ் .

இந்த இரண்டு குடும்பங்களும் எப்படி இணைந்தனர், இந்த திருமணம் நன்றாக நடந்ததா, திருமண நிகழ்வுகளில் நடக்கும் கூத்துக்கள் என்பதை கண்முன் வெட்ட வெளிச்சமாக காட்டுவதே இந்த திருமணம்.

சேரன் என்றாலே ஒரு தரமான படைப்புடன் தான் வருவார், அதேபோல் இந்த முறை திருமணம் அவசியம், ஆனால் திருமண செலவுகள் ஆடம்பரம் அத்தியாவசியம் என்ற கதையை கையில் எடுத்து வந்துள்ளார்.

அதிலும் திருமண மண்டபம் தேவையா, வந்தவர்கள் இதை சாப்பிடுவார்களா என்று தெரிந்துக்கொள்ளாமல் நம்ம இஷ்டத்திற்கு ஏதேதோ சமைத்து வைப்பது, ஒரு திருமண அழைப்பிதழுக்கு இத்தை லட்சம் செலவு செய்வதா? என இன்று கௌரவத்திற்காக கடன் வாங்கி செலவு செய்வதா என்று சேரன் சுகன்யாவிடம் வாக்குவாதம் செய்யும் இடமெல்லாம் மிடில் க்ளாஸ் மக்களுக்கு கிடைக்கும் சவுக்கடியாக உள்ளது.

ஆசைகளை குறைக்க வேண்டும், எல்லா விஷயத்திலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும், பணத்தை அளந்து செலவு செய்ய வேண்டும் என்ற கருத்தினை கொண்டுள்ளது படம்.

திருமணம் சார்ந்த படம் என்பதால் நாதஸ்வரம், மேளம் என்று பயன்படுத்தியது பாராட்டத்தக்கது, அதிலும் இரு வீட்டிலும் காதலை ஹீரோ, ஹீரோயின் சொல்வதை பாட்டாகவே வைத்தது ரசிக்கும்படி இருந்தது.

மொத்தத்தில் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் படம்

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
5.7

Average

Story - 6
Screenplay - 6
Direction - 7
Artist - 6
Music - 7
Cinematography - 6
Editing - 6
Stunt - 6
Dance - 6
Art - 6
- 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*