தடைகள் பல தாண்டி தீபாவளிக்கு வெளியாகும் தளபதியின் மெர்சல் கொண்டாட்டம்.

இவ்வருடத்தின் தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் படம்,
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 – வது படமாகவும், தளபதி விஜய் – அட்லி வெற்றிக் கூட்டணியின் இரண்டாவது படமாகவும் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள “மெர்சல்”.

மேலும் தளபதி விஜய்யின் 25 ஆண்டுகால வெற்றிகரமான திரைப்பயணத்தை கொண்டாடும் வகையிலும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் 25 ஆண்டுகால இசைப்பயணத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும், தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய அங்கமாக மெர்சல் உருவாகியுள்ளது.

தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் வடிவேலு விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார், விஜய் – வடிவேலு கூட்டணியில் இது 13-வது படமாகும். கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய்யின் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக அதிக பொருட் செலவில் உருவாகும் படம் என்பதால், ஆரம்பகால முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அதற்கேற்றார் போல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் டீசர் வெளீயீடு வரை பல சாதனைகள் புரிந்த வண்ணம் உள்ளது. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் என அனைத்து சமூக வலைத் தளங்களிலும் தளபதி விஜய்யின் பெயர் பேரிகை முழக்கமாக ஒலித்து கொண்டிருக்கிறது எனவே சொல்லலாம்.

விஜய், தி கிங்க் ஆஃப் சோசியல் மீடியா என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களில் அவருக்கு இருக்கும் சப்போர்ட் என்னவென்று காட்டுகிறது. ட்விட்டர் வரலாற்றிலேயே எமோஜி பெற்ற முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய படம் என்ற பெருமை தளபதியின் மெர்சலையே சேரும். அதே போல் கூகுள், ட்விட்டர், யூடியூப் என அனைத்து நிறுவனங்களும் மெர்சல் படத்தை பற்றிய பதிவுகளை வெளியிட்டு பெருமைபடுத்தின.

ஆளப்போறான் தமிழன் என்ற இப்படத்தின் பாடல் இந்தியாவின் நம்பர் பாடல் மற்றும் கூகுள் லெவலில் ட்ரெண்டான முதல் தமிழ் பாடல் என்ற பெருமையை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 20 -ஆம் தேதி தளபதியின் பாசபடைகள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

உலக சாதனை படைத்த மெர்சல் டீசர் :

செப்டம்பர் 21 ஆம் தேதி, படத்தின் இயக்குனர் அட்லியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான ஒரு நிமிடத்திலேயே 1000 லைக்குகளை பெற்றது. உலக சினிமா வரலாற்றிலேயே மிக அதிவிரைவு லைக்குகளை பெற்ற ஒரே டீசர் தளபதி விஜய்யின் மெர்சல் படத்தின் டீசர் தான். ரீலிஸ் ஆகிய 19 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. தற்போது 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இத்தனை கொண்டாட்டங்களுக்கும் முட்டுகட்டை போடும் விதமாக இப்படத்தின் டைட்டில் மீதான சர்ச்சை எழுந்தது. ஆனால் அதையும் வெற்றிகரமாக கடந்து தளபதியின் மெர்சல் தீபாவளி கொண்டாட்டமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது.

இப்படத்தின் வர்த்தக ரீதியான தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமைத்தை ஜீ-தமிழ் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. ஒவர்சீஸ் வினியோக உரிமையை AP International பெற்றுள்ளது. அட்மஸ் எண்டர்டெய்ண்ட்மெண்ட் மற்றும் US Tamil LLC நிறுவனமும் இணைந்து அமெரிக்க வினியோக உரிமையை வாங்கியுள்ளது.

கேரளாவில் வினியோக உரிமையை குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம் பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் மலையாளம் அல்லாத பிற மொழிகளில் 400 திரைகளில் திரையிடப்படும் முதல் படம் இதுவே ஆகும். மேலும் விஜய் படத்திலேயே அதிக திரைகளில் திரையிடப்படும் படமும் மெர்சல் தான்.

இந்தியா மட்டுமல்லாது கண்டம் தாண்டி சென்ற சாதனையும் இந்த தமிழனுக்கு உண்டு. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய திரையரங்கமான லீகிராண்டெக்ஸில் திரையிடப்படும் 2-வது தமிழ்ப்படம் தளபதியின் மெர்சலேயாகும்.

மெர்சலில் சண்டைக் காட்சிகள் அதிகம் என்பதால் தணிக்கை குழு  இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிய தோற்றத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக மேஜிக் கற்றுக் கொண்டுள்ளார். இம்மாயக்காரணின் மந்திரஜால வித்தைகளை திரையில் காண விஜய் ரசிகர்கள் மயங்கி காத்திருந்த வண்ணம் உள்ளனர்.

மெர்சல் சரவெடி வருகிற 18 ஆம் தேதி அனைவரையும் மிரள வைக்க வருகிறது. மெர்சல், தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிரிந்தி படத்தின் வினியோக உரிமையை நார்த்ஸ்டார் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*