கதைக்கரு:

ஆண், பெண் இருபாலர்களுக்கிடையே இருக்கும் நட்பு, காதல், காமம் போன்ற சிக்கலான உறவுமுறைகளைவும், இன்றைய சமூகத்தில் ஒரு பெண் மீதான ஆணின் மனநிலையையும், ஆண் மீதான பெண் மனநிலையையும் சொல்லும் படம் தரமணி.

விமர்சனம்:

அஞ்சலியால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட வசந்த் ரவியும், கணவனைப் பிரிந்து வாழும் ஆண்ட்ரியாவும் எதார்த்தமாக சந்திக்கின்றனர். நாளடைவில் அவர்கள் உறவு நட்பு, காதல் என்று அடுத்த பரிமாணத்திற்கு செல்கிறது. பின் வேலையில்லாமால் இருக்கும் வசந்த் ரவி, ஆண்ட்ரியாவுடன் ஒரே வீட்டில் வாழத் தொடங்குகிறார். உலகமயமாதலின் நாகரீக வாழ்க்கையில் வாழும் ஆண்ட்ரீயாவிற்கும், சற்று கலச்சார வாழ்க்கை முறையில் வளர்ந்த அஞ்சலியால் ஏமாற்றபட்ட வசந்திற்கும் புரிதலின்மை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகின்றனர். அதன் பின் பல அனுபவங்களை கானும் வசந்த், ஆண்ட்ரியாவின் உண்மை காதலையும், பெண்ணியத்தையும் புரிந்து கொண்டாரா என்பதை எந்த வித சினிமாத் தனமும் இன்றி எதார்த்தமாகவும் இன்றைய ஆண்களும், பெண்களும் தங்களின் பிம்பத்தை திரையில் பார்க்கும் படி திரைக்கதையை அமைத்துள்ளார், இயக்குனர் ராம்.

நிறைகள்:

1. ராமின் எதார்த்தமான திரைக்கதை, வசனம் மற்றும் காட்சிகள்.
2. ஆண்ட்ரியாவின் நடிப்பு படத்திற்கு தூண்
3. பின்னனி இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்

படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்வது படத்திற்கு சற்று பின்னடைவு.

மொத்தத்தில் தரமணியில், இயக்குனர் ராம் ஆண், பெண் உறவுகளில் இருக்கும் உணர்வுரீதியான சிக்கல்களை தைரியாமாக கையாண்டு தன் திரையுலக பயணத்தில் அடுத்த நிலை(யத்து)க்கு பயணித்துள்ளார்.

8.1

Great

Story - 8.5
Screenplay - 7
Direction - 8.5
Artist - 8
Music - 8
Cinematography - 8
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*