கேளிக்கை வரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள்.

கேளிக்கை வரி விவகாரத்தில் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரையரங்குகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரைப்படத் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்கள் வேண்டுகோளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*