இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த 2017 ஆம் ஆண்டின் இறுதியில் பிரம்மாண்டமான அறிவிப்பு என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு என்று சொல்லலாம். உலக அளவில் டாப் 10 செய்திகளில் ஒன்றாக இச்செய்தி பரவியது என்பது குறிப்படத்தக்கது.
நீண்ட கால கேள்விக்குறியாக இருந்த சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம் நேற்று முடிவுக்கு வந்தது. தன் ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று வாக்களித்தார். மேலும் அவர், போருக்கு (அரசியல்) தேவையான அனைத்து வியூகங்களையும் வகுத்து விட்டதாகவும் இனி அம்பு எய்துவது மட்டுமே பாக்கி என்று கூறியிருந்தார்.
தன் அரசியல் பயணத்தின் முதல் பணியாக, தமிழக் மக்களுக்காக பொது நலனுடன் உழைக்கும் படைகளை திரட்டும் பணியில் அவர் இன்று இறங்கியுள்ளார். புத்தாண்டு தினமான இன்று அவர் தன் ரசிகர்களை மக்கள் பணிக்காக ஒருங்கினைக்கும் மகத்தான பணியை தொடங்கியுள்ளார்.
அவர் தன் ரசிகர்களையும், நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரையும் மக்கள் பணிக்காக உழைக்கும் பொருட்டு அவர்களை திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை தன்முகவரியுடை கடிதத்தாளில் அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் கடிதத்தாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.