” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” படத்திற்காக 40 நாட்கள் விளம்பர வேலைக்காக ஒதுக்கியுள்ள வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா

” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” படத்திற்காக 40 நாட்கள் விளம்பர வேலைக்காக ஒதுக்கியுள்ள வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா

” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” படத்திற்காக 40 நாட்கள் விளம்பர வேலைக்காக ஒதுக்கியுள்ள வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா

சுய் தாஹா படத்தின் மேட் இன் இந்தியா ப்ரோமோஷனுக்காக வருண் மற்றும் அனுஷ்கா 40 நாட்களை கொடுத்துள்ளனர் !

இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களான வருண் மற்றும் அனுஷ்கா தங்களுடைய தேதிகளிலிருந்து 40 நாட்களை படத்தின் விளம்பரம் மற்றும் ப்ரோமோஷனுக்காக கொடுத்துள்ளனர். ஏனென்றால் படத்தின் மீதும் படத்தின் கதை மீதும் இருவருக்கும் அவ்வளவு நம்பிக்கை.

இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் மிகப்பெரிய அனைவரும் அறிந்த நட்சத்திரங்களான வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா எப்போதும் பிஸியாக இருக்கும் எல்லோரும் விரும்பும் நட்சத்திரங்களாக உள்ளனர். அப்படியிருந்தும் அவர்கள் சுயி தாஹா படத்தின் ப்ரோமோஷனுக்காக 40 நாட்களை ஒதுக்கி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. தன்னிலை அறிதல் மூலமாக சமூகத்தில் நல்ல மரியாதையான இடத்தை அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறும் யுனிவர்சல் கான்செப்ட் தான் இப்படத்தின் மைய கதை. இரண்டு சூப்பர்ஸ்டார்களும் இளைஞர்களை எளிதாக சென்றடையும் சிறந்த கதையம்சம் கொண்ட இப்படத்தை மக்களிடம் சிறப்பாக கொண்டுசேர்க்கும் வகையில் படத்தை ப்ரொமோட் செய்ய தேதிகள் ஒதுக்குமாறு தங்களுடைய டீமிடம் கூறியுள்ளதாக தகவல்.

படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்தனர் வருண் மற்றும் அனுஷ்கா. அவர்கள் அது எமோஷனலாகவும் மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறியதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. நாட்டுக்கு மிகவும் தேவையான கருத்துக்களை கூறும் இப்படத்தை மக்களிடம் ப்ரோமோஷன் மூலம் எடுத்து செல்வதில் மிகவும் தெளிவாக உள்ளனர் வருண் மற்றும் அனுஷ்கா. இப்படத்தை எவ்வளவு மக்களிடம் எடுத்து செல்ல முடியுமோ அதை அதை எடுத்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் இருவரும் அதனால் தான் 40 நாட்கள் ஒதுக்கி உள்ளனர் இருவரும்.

வருண் மற்றும் அனுஷ்கா முதல் முதலாக ஜோடி சேர்கிறார்கள் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கண்டிப்பாக இது சூப்பர் ஜோடியாக திரையில் ஜொலிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

இந்தியாவில் முழுவதும் தயாரிக்கப்பட்ட யஷ் ராஜின் சுய் தாஹா வருகிற செப்டெம்பர் மாதம் 28ஆம் தேதி , காந்தி ஜெயந்திக்கு முன்னால் வெளியாகுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*