கதைக்கரு :

மனிதர்களிடத்தில் மனிதாபிமானம் குறையும் போது  மனிதன் மிருகமாகிறான், என்னும் கருத்தே ஸ்பைடர் படத்தின் ஒன்லைன்.

கதைச் சுருக்கம்:

இன்டெலிஜென்ஸ் பியூரோ ஆபிஸில் வேலை செய்யும் மகேஷ்பாபு, போனில் வரும் எமர்ஜென்ஸியான அழைப்புகளை மானிட்டர் செய்து குற்றம் நடக்கும் முன்பே அதை தடுக்கிறார். அவ்வாறாக ஒரு போன் காலை டேப் செய்து ஒரு சிறுமிக்கு உதவ தனது போலீஸ் தோழியை அனுப்ப வைக்கிறார். அவர்கள் இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் உண்மையை கண்டுபிடிக்க களமிறங்கும் மகேஷ்பாபுவிற்கு கொலையாளி பற்றிய அடுத்தடுத்து பல திடக்கிடும் உண்மைகள் தெரிய வர இறுதியில் என்னவாயிற்று ? என்பதை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர் ஸ்டைலில் தொழில்நுட்பம், காதல், எதார்த்தம் என்று கலந்து சொல்லியிருக்கிறார்.

நடிகர்கள் :

தெலுங்கில் பல மாஸ் படங்களை நடித்து ஹிட் கொடுத்த மகேஷ் பாபுவிற்கு, ஒரு ஸ்மார்ட்டான ரோல் கொடுத்திருக்கிறார் இயக்குனர். சிவா கேரக்டரில் வலம் வரும் மகேஷ்பாபு தனது கேரக்டரின் அளவினை உணர்ந்து கரெக்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெறுகிறார். வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு வேற லெவல் . நடிகனாக வேறொரு தளத்திற்கு சென்று விட்டார். ராகுல் பிரீத் சிங்கிற்கு தமிழில் இது ஒரு நல்ல கம்பேக் மூவி . பரத் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் தனது பங்களிப்பை கட்சிதமாக கொடுத்து விட்டார்.
நிறைகள் :
1. எஸ்.ஜே.சூர்யா நடிப்பு மிகப் பெரிய பலம்
2. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.
3. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு.
4. திரைக்கதையில் இயக்குனரின் புது முயற்சி

படத்தின் இரண்டாம் பாகம் சற்று மெதுவாக நகர்வது சற்று பின்னடைவாக இருக்கிறது.

மொத்தத்தில் ஸ்பைடர் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்கான ஒரு தரமான படம்.[/vc_column_text][/vc_column][/vc_row]

8

Great

Story - 8
Screenplay - 7
Direction - 8
Artist - 8
Music - 8
Cinematography - 8
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*