காலா படத்தில் பாடும் விஜய் பிரகாஷ் !

காலா படத்தில் பாடும் விஜய் பிரகாஷ் !

காலா படத்தில் பாடும் விஜய் பிரகாஷ் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0′ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா’ படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி – பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருக்கிறார்.

இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘காலா’ இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. ‘காலா’ படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படியானதாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய ஆலோசனையை பாடலில் சேர்ப்பது எனக்குப் பெருமை. மிக்க நன்றி!” எனக் கூறி, ரெட்ரோ 80களின் இசை, ஸ்டைலிஷ் 90-2000த்தின் இசை, மார்டன் டே எலக்ட்ரோ இசை, மேற்கூறிய அனைத்தும் கலந்து’ என நான்கு ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாக்களிக்கத் துவங்கினர். இப்போது அந்த நான்கு ஆப்ஷன்களில் அதிக வாக்கு பெற்றிருப்பது, மேற்குறிய அனைத்தும் கலந்து என்பது. எனவே காலாவின் அறிமுகப் பாடல் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் ஒரு முக்கிய தகவலை தனது த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்,

முதல் முறையாக பாடகர் விஜய பிரகாஷ் என்னுடன் பணிபுரிகிறார்.மேலும் காலா பத்திரர்கக ஒரு பாடல் பாடியுள்ளார் என தெரிவித்துள்ளார் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*