சென்னையில், துரிதமான படப்பிடிப்பில், STR-ன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

த்ரிஷா இல்லன்னா நயந்தாரா படத்தின் மூலம் அறிமுகமாகிய, பிரபலாமான இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரன் முதன் முதறையாக STR -யுடன் இணையும் படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன். படத்தின் கதாநாயகனான STR முதன் முறையாக 3 கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா மற்றும் சனா கான் நடிக்கின்றனர். இதில் சனா கானை தவிர மற்ற இரு கதா நாயகிகளுடன் முதன் முறையாக ஜோடி சேருவதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குளோபல் இன்போடெய்ண்மெண்ட் சார்பில் திரு. மைக்கேல் ராயப்பன் வழங்க செராபின் ராய செவியர்  தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் தற்போது இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது.

இச்செய்தியை நேற்று (19-4-17) இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் STR தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தனர். நடிகர் STR தனது ட்விட்டர் பக்கத்தில்,” அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் ஜூன் 23 ஆம் தேதி ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும்.” என்று அறிவித்துள்ளார். சிம்பு யுவன் வெற்றிக்கூட்டணி இப்படத்திலும் தொடர்கிறது.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், இரண்டு டீசர்கள் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய இப்படத்தின் செய்திக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ட்விட்டரில் 20 ஹாஷ் டேக்குகள் ரசிகர்களால் உருவாக்கப்பட்டு டிரெண்ட் ஆனது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜூன் 23 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துரிதப்படுத்தப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இணையாக ஒரே நேரத்தில் ஜெட் வேகத்தில் நடைபெற்றுவருகிறது.

நடிகர்கள்

சிலம்பரசன் STR

ஸ்ரேயா

தமன்னா

சனா கான்

மகத் ராகவேந்திரா

கோவை சரளா

விடிவி கணேஷ்

நான் கடவுள் ராஜேந்திரன்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து இயக்கம்ஆதிக் ரவிச்சந்திரன்

இசை யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த்

படத்தொகுப்புரூபன்

தயாரிப்பு – செராபின் ராய செவியர், S. மைக்கேல் ராயப்பன்

தயாரிப்பு நிறுவனம்குளோபல் இன்போடெய்ண்ட்மெண்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*