யூடியூபில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது ‘சத்யா’ பட டிரைலர்.

 நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சத்யராஜ் வழங்கும்  திரைப்படம் ” சத்யா “ . சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னால் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.அதுமட்டுமல்லாமால் ட்ரைலர் வெளியான பிறகு அனைவருக்கும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது , சத்யா ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலர் ட்விட்டரில் பாராட்டி ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் 1மில்லியன் பார்வையாளர்களால் கண்டுக்களிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. சிபிராஜ் , ரம்யா நம்பீசன் , வரலட்சுமி சரத்குமார் , ஆனந்த ராஜ் , சதிஷ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*