சர்கார் திரைவிமர்சனம்

நடிகர்கள் தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ்,வரலட்சுமி சரத்குமார்,பழ.கருப்பையா,ராதாரவி,யோகி பாபுஇயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ்சினிமா வகை Dramaகால அளவு164

கரு: தன் ஓட்டு, கள்ள ஓட்டாக போடப்பட்டதால் , நீதி கேட்டு கோர்ட்டுக்கு போகும் கார்ப்பரேட்
மான்ஸ்டரான என்.ஆர்.ஐ ஹீரோ சந்திக்கும் சோதனைகளும், சாதனைகளுமே “சர்கார்” படக்கரு .

கதை: பல நாடுகளையும், அங்குள்ள சாப்ட்வேர் கம்பெனிகளையும் தன் அதிபுத்திசாலித்தனத்தால், அலறவிடும் அசகாய சூரர் அமெரிக்கா வாழ் இந்தியர் ஜி எல் கம்பெனி முதலாளி சுந்தர் ராமசாமி எனும் விஜய், சென்னை, திருவல்லிக்கேணி பள்ளியில் உள்ள தன் ஓட்டை போட, ஒரு தேர்தல் நாளில், தனி விமானத்தில், தக்க பாதுகாப்புடன் இந்தியா வருகிறார்.

அப்படி, வந்த இடத்தில், அவரது ஓட்டு கள்ள ஓட்டாகப் போடப்பட்டிருப்பது கண்டு, பொங்கி எழும் விஜய் கோர்ட்டுக்குப் போகிறார். அதானல் ஆட்சி அமைக்க முடியாமல் ஜெயிச்ச கட்சித் தவிக்க, அதில் முதல்வராக வேண்டிய அக்கட்சித் தலைவர் பழ கருப்பையாவும், அவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் கூடவே அக்கட்சியின் நம்பர்-2 ராதாரவியும் இவரை எதிர்க்க, அக்கட்சி எம்எல்ஏ லிவிங்ஸ்டன் மகள் கீர்த்தி சுரேஷின் பக்கா பலத்துடன் எப்படி? ஒட்டு மொத்த பேரையும் ஜெயிக்கிறார்..? என்பது தான் “சர்கார் ” படத்தின் கதையும், களமும்!

காட்சிப்படுத்தல்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத், ராதாரவி, லிவிங்ஸ்டன்… உள்ளிட்டோர் நடிக்க, வெளி வந்திருக்கும் “சர்க்கார் ” படத்தில் “நீங்க பண்ற தப்பு, உங்க எதிரிக்கு நீங்க கொடுக்கிற ஆயுதம்”
என்பது உள்ளிட்ட வசன காட்சிகளும், 49 ஓ நோட்டா மாதிரி, தேர்தலில் 49 பி விதிகளை எளிய மக்களுக்கும் புரியும்படி விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் படத்திற்கு பெரும் பலம்.

கதாநாயகர்: உலக நாடுகளை தன் புத்திசாலித்தனத்தால் கலங்கடிக்கும் ‘கார்ப்பரேட் மான்ஸ்டர்’ சுந்தர் ராமசாமியாக விஜய் செம ஷார்ப்பாக தன் கேரக்டரை புரிந்து நடித்திருக்கிறார். “எதிர்க்க ஆளே இல்லன்னு நினைக்கிறது தான் ஜனநாயகத்தோட பெரிய எதிரி”, “கொசு கடிச்சு 87 பேர் டெங்குன்னு ஒரே மாசத்துல சாகுற கொடுமை வேறு எங்காவது நடக்குமா? என்பது உள்ளிட்ட வசனங்களை பேசும் போது விஜய் கொதிக்கும் இடங்களிலும் சரி, தன்னை திரும்பி போகும் அயோத்தி குப்பம் மக்களிடம், தக்காளி கதை சொல்லி,”நான் மீனவன்டா… ” என ஆக்ரோஷப்படும் இடங்களிலும் மிரட்டியிருக்கிறார் மிரட்டி!<>

கதாநாயகி: கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் இளைத்து, களைத்து விஜய்யுடன் நடிக்கும் பூரிப்பில் ரொம்பவே அசத்தியிருக்கிறார்.

வில்லி: கனடாவில் இருந்து கொண்டே முதல்வர் அப்பாவுக்கு ஆதரவாக ஹீரோ விஜய்க்கு எதிராக காய் நகர்த்தும், வரலட்சுமி சரத்குமார், இத்தனை நாள் இப்படிப்பட்ட நடிப்பை எல்லாம் எங்கே ஒளித்து வைத்தார்? எனக் கேட்கும் அளவிற்கு அழகான வில்லியாக மிரட்டியிருக்கிறார்.

காமெடியன்: விஜய்யின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டு, அவரிடம் சிக்கி, விஜய்யையே கலாய்த்து பின் அவரது தோழராக வரும் யோகி பாபு, டைம்மிங் காமெடியில் படம் முழுக்க டபாய்ப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

மற்றபடி, ராதாரவி, பழ.கருப்பையா, லிவிங்ஸ்டன், பிரேம், சிவசங்கர் மாஸ்டர்… உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். பலே பலே…

தொழில்நுட்பகலைஞர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஓ… எம்.ஜி பொண்ணு… “, “மனிமா … மனிமா… ” , “டாப்பு டக்கரு..”, “ஏய் நக்கலு பிக்கலுமா …” உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம், பிரமாண்டம்.

பலம்: விஜய், சர்கார் எனும் டைட்டில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் “பஞ்ச்” வசனங்கள்.

பலவீனம்: கதை திருட்டு காண்ட்ரவர்ஸியும் அதை உண்மை என ஒப்புக் கொண்டு சமாளித்து, வரும் டைட்டில் கார்டு முருகதாஸின் பெரிய விளக்கக் கடிதம்.

இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்தப் படம் பேசியிருக்கும் அரசியலும், 49 பி சட்ட திட்ட மும் மக்களிடம் எடுபட்டால், “சர்கார், மாநில மத்திய சர்காரை நிச்சயம் யோசிக்க வைக்கும்” கக்கனையும், காமராஜரையும் நாமதான் கண்டுபிடிக்கப் போறம்…” எனும் வசனங்களும் ஒரு சில பலவீனங்களையும் தாண்டிய பெரும் பலம்.

பைனல் “பஞ்ச்” : “சர்கார் ‘- ‘கலக்குறார்!”

7.7

Good

Story - 7
Screenplay - 8
Direction - 8
Artist - 8
Music - 8
Cinematography - 8
Editing - 7
Stunt - 8
Dance - 8
Art - 8
- 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*