சந்தோஷத்தில் கலவரம் ! விமர்சனம்

ஸ்ரீகுரு சினிமாஸ் சார்பில் வி.சி.திம்மா ரெட்டி தயாரித்திருக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிராந்தி பிரசாத் .
இதில் நிரந்த், இருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி .கல்யாண், கௌதமி , சௌஜன்யா, ஷிவானி, அபேக்ஷா, அலெக்ஸ், சுவாமி என இப்படத்தில் புதுமுகங்களுடன் ராவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்கள்- பவுலியஸ் கொண்டிஜிவாஸ், ஹாரிசன் லோகன்ஹோவஸ், ஷிரவன்குமார், இசை – சிவநாக், பாடல்கள்-கபிலன்,மணி அமுதன்,ப்ரியன், எடிட்டிங் -கிராந்தி குமார்,ஒலிப்பதிவு அருண் வர்மா, கலை-நித்யானந்த், சண்டை-நந்து, நடனம்-கிராந்தி பிரசாத், சங்கர், இணை இயக்குனர்-பி.டி.மகேஷ் குமார், டிசைன்ஸ்-இளையராஜா, பிஆர்ஒ-சக்தி சரவணன்.
நண்பர்கள் எட்டு பேர் நிரந்தின் பிறந்த நாளை ஜாலியாக கொண்டாட மலைப்பிரதேசத்தில் நிரந்திற்கு சொந்தமான பங்களாவிற்கு வருகிறார்கள். அனைவரின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தியால் தடை படுகிறது. நிரந்தை மட்டும் குறி வைக்கும் அந்த பேயின் அட்டகாசத்தை கண்டு பயந்து போகும் அனைவரும் அந்த பங்களாவை விட்டு வெளியேற நினைக்கும் போது அவர்கள் வந்த கார் பழுதாகிவிடுகிறது. அதனால் ஒன்பது பேரும் தப்பிப்பதற்காக காட்டில் நடந்தே பயணிக்கிறார்கள். அதன் பின் துரத்தும் பேயிடமிருந்து இவர்கள் தப்பித்தார்களா? மீண்டும் பத்திரமாக சொந்த ஊருக்கு சென்றார்களா? இதற்கிடையே ஜோடிகளின் காதல் கை கூடியதா? என்பதே மீதிக்கதை.
நிரந்த், இருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி .கல்யாண், கௌதமி , சௌஜன்யா, ஷிவானி, அபேக்ஷா, அலெக்ஸ், சுவாமி என்று அனைத்து புதுமுகங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வரும் ரவிமரியா படத்தின் திருப்புமுனையாக வந்து பேயாக பயமுறுத்துகிறார்.
ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்கள் பவுலியஸ் கொண்டிஜிவாஸ், ஹாரிசன் லோகன்ஹோவஸ் இவர்களுடன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள ஷிரவன்குமார் திகில் காட்சிக்கோணங்களில் அசர வைத்திருக்கிறார்.
எழுத்து, இயக்கம்-கிராந்திகுமார்.பாசிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி ஆகிய இரு சக்திகளால் இணைந்த இவ்வுலகத்தில் தினமும் நடக்கும் போரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைச் சொல்லும் படம் சந்தோஷத்தில் கலவரம். இதில் காதல், பாசம், நட்பு, நகைச்சுவை, ஆக்ஷன், திகில், ஆன்மீகம் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லரான திரைக்கதையில் இளைஞர்;களுக்கு காஸ்மிக் எனர்ஜி பற்றி கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கிராந்தி குமார். இறுதியில் ஒவ்வொரு மனிதருள்ளும் கடவுள் இருக்கிறார் என்பதை ஆன்மிக மகான்களை உதாரணம் காட்டியிருப்பது சிறப்பு

6.3

Fair

Story - 6
Screenplay - 6
Direction - 6
Artist - 7
Music - 6
Cinematography - 7
Editing - 6
Stunt - 6
Dance - 7
Art - 6
- 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*