ஐந்து நடன இயக்குனர்கள் பணியாற்றிய சந்தானத்தின் “கலக்கு மச்சா” பாடல்.

சக்க போடு போடு ராஜா படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் “கலக்கு மச்சான்” என்கிற ஒரு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் கடந்த அக்டோபர் – 6 ஆம் தேதி வெளியிட்டனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த பாடலின் நடன காட்சிக்கு 5 நடன இயக்குனர்கள் பணியாற்றியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர். ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி என ஐந்து நடன இயக்குனர்கள் இப்பாடலில் சந்தானத்திற்கு நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர். இப்பாடல் படத்தின் ஹீரோ எண்ட்ரி பாடல் என்பதால் காட்சியை படமாக்க மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர் படக்குழுவினர்.

STR இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ரோகேஷ் வரிகள் தந்துள்ளார். ராக்ஸ்டார் அனிரூத் பாடியுள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெறவுள்ளது.

G.L சேதுராமன் இயக்கியுள்ள “சக்க போடு போடு ராஜா” படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*