சண்டக்கோழி 2 விமர்சனம் !

நடிகர்கள்: விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், முனீஷ்காந்த், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி மற்றும் பலர்.
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – சக்திவேல்
எடிட்டர் – பிரவீன்
இயக்கம் – லிங்குசாமி
தயாரிப்பு – விஷால்
பிஆர்ஓ. – ஜான்சன்

கதைக்களம்….

சாப்பாட்டில் ஆட்டுக்கறி இல்லாத பிரச்சினையால் வரலட்சுமியின் கணவன் ஒருவனை வெட்ட, பின்னர் அவர்கள் வரலட்மியின் கணவரை வெட்டுகிறார்கள்.

இந்த கலவரத்தால் ஊர் திருவிழா தடைப்படுகிறது. இனி திருவிழா நடந்தால் தன் கணவரை வெட்டியவனின் குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என சவால் விடுகிறார் வரலட்சுமி.

ஒரு சிலரை அப்போதே வெட்டிவிட்டு ஹரி என்ற ஒருவனை வெட்ட அடுத்த திருவிழாவுக்காக காத்திருக்கிறார்.

கலவர காரணத்தால் திருவிழாவை நடத்த அனுமதி மறுக்கிறார் கலெக்டர்.

இந்நிலையில் 7 வருடங்களாக நின்றுப் போன ஊர் திருவிழாவை நடத்த 7 கிராம மக்களையும் கூட்டி சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார் ராஜ்கிரண்.

பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தில் இனி உயிரிழப்பு இருக்காது. அவர்களுக்கு நான் பாதுகாப்பு என பொறுப்பேற்று கொள்கிறார் ராஜ்கிரண். இவருக்கு துணையாக களத்தில் நிற்கிறார் விஷால்.

திருவிழா அமைதியாக நடந்ததா.? அந்த குடும்பத்தை காக்க வீச்சருவாளை எடுத்தாரா விஷால்? ராஜ்கிரண் சொன்ன வாக்கை காப்பாற்றினாரா? வரலட்சுமி ஹரியை வெட்டினாரா? என்பதே மீதிக்கதை.

sandakozhi 2 stills

கேரக்டர்கள்…

13 வருடங்களுக்கு முன் சண்டக்கோழி படத்தில் பார்த்த போது விஷால் எப்படியிருந்தாரோ? அதே போலத்தான் இதிலும் இருக்கிறார். அதற்காகவே பாராட்டலாம்.

அப்போது அப்பாவித்தனம் இருந்தது. இதில் படம் முழுக்க சீரியஸ் ஆகவே இருக்கிறார். ரொமான்ஸ் அதிகம் இல்லை என்றாலும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கவிட்டுள்ளார்.

மீரா ஜாஸ்மின் ரேங்சுக்கு நாம் கீர்த்தியை எதிர்பார்க்க முடியாது. ஆனால் தன் பாணியில் அசத்தியிருக்கிறார். கோயில் திருவிழாவில் கீர்த்தி போடும் குத்தாட்டம் செம அப்ளாஸை அள்ளும்.

கிராமத்து பெண்களுக்கு உரித்தான துடுக்குத்தனத்தால் மனதில் நிறைகிறார் கீர்த்தி. வாயாடி பெண்ணாக துறுதுறுவென ரசிக்க வைக்கிறார். (கிராமத்து பாஷை சில காட்சிகளில் செயற்கையாக உள்ளது)

ஆரம்பம் முதலே மிரட்டலான பார்வையில் வருகிறார் வரலட்சுமி. இடையில் அமைதியாக இருக்கும் இவர் க்ளைமாக்ஸ் பைட்டில் மிரள வைத்துள்ளார்.

அழகான வில்லிகள் இங்கே இல்லை என்பதால் வரலட்சுமி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

ராஜ்கிரணை பார்த்தால் நமக்கே ஒரு கம்பீரம் வரும். அதே மிடுக்கு. அதே பேச்சு. துரை ஐயாவாக வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் இதுபோல ஒரு பெரியவர் இருந்தால் ஊரே நன்றாக இருந்துவிடும்.

கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி என ஒவ்வொரு காட்சியிலும் ஊரே திரண்ட உணர்வு. நிச்சயமாக இத்தனை பேரையும் ஒரே நேரத்தில் வேலை வாங்கிய லிங்குசாமியை பாராட்டியே ஆக வேண்டும்.

sandakozhi 2 stills keerthy

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இதுபோன்ற ஆக்சன் படங்ளுக்கு மிகப்பெரிய பலமே பின்னணி இசைதான். அதை உணர்ந்து பின்னி எடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஒவ்வொரு சீனுக்கும் அதிர வைத்துள்ளார்.

கம்பத்து பொன்னு, மீசைக்கார, பாடல்கள் ரசிக்க வைக்கும். ஆளாள பாட்டு இதமான ராகம்.

சக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. கீர்த்தி மற்றும் வரலட்சுமியை ரசித்து ரசித்து க்ளோஸ்அப் ஷாட்டுக்கள் நிறைய வைத்துள்ளார். க்ளைமாக்ஸ் பைட் சீன் முதல் பார்ட்டில் பார்த்த அதே லொக்கேசன் உணர்வு.

எடிட்டர் பிரவீனின் சில காட்சிகளை கட் செய்திருக்கலாம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவு.

பிருந்தா சாரதி, எஸ்.ரா இருவரும் எழுதியுள்ள வசனங்கள் சில இடங்களில் கைத்தட்டல்கள் பெறுகிறது.

sandakozhi 2 stills vishal varu keerthi

இயக்கம் பற்றிய அலசல்…

சண்டக்கோழி முதல் பார்ட் வந்தபோது நடிகராக மட்டுமே இருந்தார் விஷால். தற்போது 13 வருடத்தில் அவர் நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட்டதால் அவருக்கு ஏற்ப காட்சிகளில் ஃபயர் ஏற்றியுள்ளார் லிங்குசாமி.

சண்டக்கோழி2 என தலைப்பிட்டதாலோ என்னவோ படத்தில் பாதி சண்டைக்காட்சிகளே உள்ளது. ஆக்சன் ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும்.

லிங்குசாமி படங்கள் என்றால் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். அதை இதிலும் காப்பாற்றியிருக்கிறார்.

விஷால் அட்வைஸ் செய்தவுடன் வரலட்சுமி கண்ணீர் விடுவதும் மழை பெய்வதும் எல்லாம் ரொம்ப ஓவர்.

திருவிழா கடைசி நாளில் ராஜ்கிரண் திடீரென வருவது நம்புறமாதிரி இல்லையே.

முனீஷ்காந்த் ராஜ்கிரணாக வேஷம் போடுவதும் ஊர் மக்கள் முன்னிலையில் காரில் அமர்ந்திருப்பதும் நம்பும்படியாக இல்லை. கார் சைடு மிரரில் முகம் தெரியாது ஓகே. முன் கண்ணாடியிலுமா? தெரியாது. லிங்கு சாரே என்ன சார்?

6.8

Fair

Story - 7
Screenplay - 6
Direction - 7
Artist - 7
Music - 7
Cinematography - 8
Editing - 7
Stunt - 7
Dance - 7
Art - 6
- 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*