தமிழ்நாட்டில் பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதே நம் அனைவரது நோக்கம் !! ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

தமிழ்நாட்டில் பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதே நம் அனைவரது நோக்கம் !!  ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

ரஜினி அரசியலில் குதிப்பார் என நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பயண அறிவிப்பை அவர் வெளியிட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.

இன்னும் கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படாத நிலையில், உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த்.

அதன்தொடர்ச்சியாக இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என அழைக்கப்பட்டு வந்த ரஜினியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளும் அண்மையில் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் விவசாய அணியை உருவாக்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

விவசாய அணிக்கான தனி நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கு உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து விரைவில் தீர்வுகாணும் வகையில் பணியாற்றுபர்களாக இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதற்காக விவசாய சங்கங்களோடும் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளார். விவசாயம் தவிர கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: அரசியல் என்பது பொதுநலம்,சுயநலமல்ல, மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம். ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும்.

ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம், தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லவில்லை அவர்களையும் கவனிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*