வெள்ளித்திரையில் மின்னப்போகும் பிக்பாஸ் வீட்டின் முதல் ஜோடி.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருமே மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளனர். இவர்களில் நடிகை ஓவியா தனது இயல்பான நடவடிக்கையால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்து புகழின் உச்சத்தை அடைந்துள்ளார்.

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் வெற்றி பெற்ற ஆரவ்விற்கும் மக்களின் வரவேற்பு அதிகாமாக இருக்கிறது. மேலும், இவர்கள் இருவரும் வெள்ளித்திரையில் சேர்ந்து நடிக்கும் தருணத்தை அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களான ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் முதல் ஜோடியாக படம் நடிக்கவிருக்கிறார்கள்.

கிரகணம் படத்தை இயக்கியுள்ள இளன் தனது அடுத்த படத்தில் ஹரீஷ் கல்யான் மற்றும் ரைசா வில்சனை வைத்து படம் இயக்கயுள்ளார். ‘

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை மிக விரைவில் படக்குழுவினர் வெளியிடயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*