ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘தென்னாட்டான்’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தாரகவும் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கிய இவர், தன் முதல் படத்திலேயே தன் அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பின் சில படங்களில் வில்லனாக வலம் வந்த ஆர்.கே.சுரேஷிற்கு  கதாநாயகன் வாய்ப்பு குவிந்தது.
‘வேட்டை நாய், பில்லாபாண்டி, தனிமுகம்’ மற்றும் ‘காக்க’ போன்ற படங்களில் கதா நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் ‘இப்படை வெல்லும், ஸ்கெட்ச், ஹர ஹர மஹா தேவகி’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ‘தென்னாட்டான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திவேஷா ரேஷ்மா சினி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் விஜய் பாண்டி இப்படத்தை இயக்குகிறார். இன்று படத்தின் பூஜை  நடைபெற்றது, படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*