PaPaandi (PowerPaandi) Movie Review

இந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ். ஒரு நடிகராக கவிஞராக பாடகராக என பல அவதாரங்களில் தடம் பதித்தவர். இன்று தனுஷின் அப்பா, அண்ணன் போலவே  பவர் பாண்டி மூலம் இயக்குனராக களம் இறங்கியுள்ளார்.

உணர்வுகள் என்பது மனிதர்கள்ow அனைவருக்கும் பொதுவானது, அதற்கு வயது பேதமல்ல. இன்றைய தலைமுறையின் நவீன வாழ்க்கை முறையிலும், கலாச்சாரத்திலும் மூத்த தலைமுறையினரை பல இடங்களில் மதிக்க தவிறிவிடுகின்றனர், மேலும் அவர்களின் சிறு சிறு உணர்வுகளையும், ஆசைகளையும் கூட அலட்சியப்படுத்தும் போக்கினை கடைப்பிடிக்கின்றனர். அப்படி நம் கதாநாயகன் பவர்பாண்டி தன் மகனால் சந்திக்கும் சிறு சிறு உணர்வுபூர்வமான பிரச்சனைகளால் என்ன முடிவெடுக்கிறார் என்பதே பவர்பாண்டியின் கதை.

ராஜ்கிரண் பவர் பாண்டியாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி, தன் மகன் பிரச்சன்னாவை நன்றாக வளர்க்க, அவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகின்றார்.

அதன் பிறகு ராஜ்கிரண்  வீட்டில் ஒரு தங்கக்கூண்டுக்குள் அடைப்பட்ட கிளியாய் தவிக்கிறார். தொடர்ந்து தான் செய்யும் சில விஷயங்களால் பிரசன்னா பாதிக்கப்பட இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வருகிறது. ஒரு கட்டத்தில் தனக்கான வாழ்க்கையை தான் வாழவேண்டும் என்று ஒரு பைக் ரைட் செல்ல, அங்கு தான் தன் முதல் காதலியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வர, பிறகு என்ன ஆனது என்பதை ரொம்ப அழகாக காட்டியுள்ளார் இயக்குனர் தனுஷ்.

படத்தின் நாயகன் ராஜ்கிரண் தனது அபராமான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை பெறுகிறார். இந்த வயதில் ஹீரோ கதாபாத்திரமா என்று வினா எழுப்பும் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்து ஆக்சன், பாடல், நடனம், காதல் காட்சிகள் என்ற அனைத்திலும் பின்னியுள்ளார். தன் மகனுக்காக அத்தனை தியாகங்களை செய்து, பின் அவர் வீட்டில் அவருடைய கட்டுப்பாட்டில் சுதந்திரமாக ஏதும் செய்ய முடியாமல் பேரன், பேத்தி தான் உலகம் என வாழும் இடத்திலும் எனக்கு சுதந்திரம் வேண்டும் என சரக்கு அடித்துவிட்டு மகனிடம் கோபப்படும் இடத்திலும் ராஜ்கிரண் அந்த கதாபாத்திரத்தில் பொருந்தி கண்முன்னே நிக்கிறார்.

பொழுது போக்கிற்காக சினிமா ஷுட்டிங் சென்று , அங்கு அவரை ஒரு கடவுள் போல் அத்தனை ஸ்டண்ட் கலைஞர்களும் பார்க்க, அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில், மனித மனம் சிறு சிறு பாரட்டுதலுக்கும், மதிப்பிற்கும், பாசத்திற்கும் தானே ஏங்கி தவிக்கிறது என்ற உண்மையை அனைவர் மனதிலும் நிலை நிறுத்திவிட்டார்.

பிரசன்னா, சாயாசிங், பக்கத்து வீட்டு வாலிபன் ரின்சன், டிடி, கௌதம் மேனன், பாலாஜி மோகன், ரோபோ ஷங்கர், ராஜ்கிரணின் பேரன், பேத்தி இரண்டு குட்டிஸ் வரை அத்தனை பேரும் யதார்த்தமாக கலக்கியுள்ளனர். ரேவதி நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  வருடங்கள் கடந்தும் சென்ற பின்னரும் காதலை மறைக்க முடியாமல் அவர் ராஜ்கிரணிடம் காட்டும் வெட்கம் ரசிக்க வைக்கின்றது.

‘வாழ்க்கையில் வேலை, வேலையில்லாதவன் என்பதெல்லாம் சும்மா..வெட்டியாக இருப்பதே நிரந்தரம்’, ‘காதல் கடவுள் கொடுத்ததோ, நாமே அமைத்துக்கொண்டதோ ஆனால், ரிசல்ட் ஒன்று தான்’, ‘நம்ம குழந்தைகள் தான் வாழ்க்கை என்று இருக்கின்றோம், ஆனால், அவர்களின் வாழ்க்கை நாம் இல்லையே’ என பல இடங்களில் அப்லாஸ் அள்ளுகின்றார் இயக்குனர் தனுஷ்.

ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிக பெரிய பலம் படத்திற்கு என்ன தேவையோ அதை கட்சிதமாக அவருக்கு மிக பிடித்த இளையாராஜா பாணியில் அமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னனி இசை அருமை என்று சொல்லலாம்.

படத்தின் நிறைகள் :
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு, குறிப்பாக ராஜ்கிரண் – ரேவதி ரொமான்ஸ் காட்சிகள். அளவான வசனங்கள். சிறு கதாபாத்திரத்திற்கும் பெரிய பங்களிப்பு (ரின்சன், டிடி)

இன்றைய காலக்கட்டத்தில் அப்பா, அம்மாக்களை கவணிக்காத பிள்ளைகளுக்கு பாடம் புகட்டும்படியான பல காட்சிகள்.

தனுஷ் – மடோனா சிறுவயது ராஜ்கிரண், ரேவதியாக வரும் காட்சிகளில் சிறு பிழைக் கூட இல்லாமல் கலக்கியுள்ள திறமை

பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அணைத்து தொழில்னுட்ப விஷயங்களும் படத்திற்கு பலம்

மொத்தத்தில் பவர்பாண்டி நம் வீட்டில் இருக்கும் தாய் தந்தையரின் உணர்வுகளையும், மதிப்பையும் புரிய வைக்கும் ஒரு நல்ல புத்தகம் என்றே சொல்லலாம். இந்த வயதில் இருந்து வயதானவர்களின் உணர்வுகளை மிகவும் கவனமாக ஆராய்ச்சி செய்து அவர்களுக்கான படைப்பாக இயக்குனர் தனுஷ் கொடுத்துள்ளார்.

8.9

Great

Story - 9
Screenplay - 9
Direction - 8.5
Music - 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*