கதைக்கரு :

சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவன் தன் வாழ் நாளில் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் தோற்கிறான். தான் இழந்த சொத்துகளை திரும்ப பெரும் முயற்சியில் தன்னை போன்று பொருள் தேடி அலையும் ஒருவனை ஃபாரினில் நடப்பது போன்று இல்லீகலாக நடக்கும் ரெஸ்ட்லீங் போன்ற சண்டையிடும் போட்டியில் சேர்த்து விடுகிறார். அம்முயற்சியில் அவர்களுக்கு நடந்தது என்ன? எந்த மாதிரியான பிரச்சனையை சந்திக்கின்றனர். முடிவில் அவர்கள் பணத்தை மீட்டார்களா ? இல்லையா ? என்பதே பண்டிகை படத்தின் கதை.

விமர்சனம்.

விஜயலட்சுமி ஃபெரோஸின் டீ டைம் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் வெளியாகும் பண்டிகைஒரு நல்ல கொண்டாட்டம் என்றே சொல்லலாம். இயக்குனர் தன் படத்தின் கதையை சொன்ன விதம் மிகுந்த பாராட்டுக்குறியது. தற்போது வெளியான படங்களில் இவரது பண்டிகையை சற்று வித்தியாசமாகவே கொண்டாடியிருக்கிறார். நடிகர்கள் தொழில்னுட்ப கலைஞர்கள் என அனைவருமே போட்டி போட்டு தன் திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

தன் தேர்ந்தெடுக்கும் கதைகளில் ஒரு தனித்துவத்தை தேடும் கிருஷ்ணாவிற்கு யாமிருக்க பயமேன் படத்திற்கு பிறகு பண்டிகை ஒரு நல்ல அங்கீகார்த்தை கொடுத்துள்ளது. நடிகை ஆனந்தி தன் கதாபாத்திரத்தை சரியாக ஏற்று நடித்துள்ளார்.

படத்தில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு அதிக கவனம் தந்துள்ளார், இயக்குனர். மதுசூதன் ராவ், அர்ஜய், நித்தின் சத்யா, சண்முகராஜன் மற்றும் இரண்டாம் பாகத்தில் வரும் சபரீஷ் என அனைவரின் கதாபாத்திரத்தையும் சிறப்பாக செதுக்கியுள்ளார்.

நிறைகள்:

இப்படத்தின் அனைத்து தொழில்னுட்ப கலைஞர்களும் அதிகமாக அறிமுகமில்லாததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைகிறது. எனவே மிகவும் புதிதான இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு படம் நிச்சயமாக பிடிக்கும்.

விக்ரம் ஆர்.எச் ன் பின்னனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் படத்தொகுப்பு இரண்டாவது பலமாக அமைகிறது. படத்தின் காட்சிகளின் ஓட்டம் ஒரே சீராக இருப்பதால், காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

படத்தின் சண்டைக்காட்சிகள் சிறப்பாக உள்ளது.

முதல் பாதியில் அர்ஜெய் பாத்திரமும் இரண்டாம் பாதியில் சபரீஷ் கதாபாத்திரமும் புதுமையாக இருந்தது.

மொத்தத்தில் பண்டிகை, கொண்டாட்டம்.[/vc_column_text][/vc_column][/vc_row]

8.1

Great

Story - 8
Screenplay - 8
Direction - 8
Artist - 8
Music - 8.5
Cinematography - 8
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*