NGK விமர்சனம்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில்

சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி, நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் படம் “NGK”.

2 வருட காத்திருப்பு சூர்யா ரசிகர்களுக்கு,4 வருட காத்திருப்பு செல்வராகவன் ரசிகர்களுக்கு. இரண்டாம் உலகம் படத்திற்கு பின் செல்வராகவன்படம் தற்போது வெளியாகி உள்ளது .
முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படம் இது.

அரசியல்வாதிகளால் பாதிக்கப்படும் மக்களுக்காக ஒருவன் அரசியலில் இணைவதே கதை. முழுக்க முழுக்க செல்வராகவன் படமாகவே கண்ணனுக்கு தெரிகிறது.

முதல் காட்சியிலையே சூர்யா அறிமுகம் தெறி ரகம். சாய்பல்லவி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

அரசியலுக்குள் நுழைந்ததும் ஒருவன் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை திரைக்கதையில் கச்சிதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் படம் இடைவேளை வர வர சீட்டின் நுனியில் அமரவைக்கிறது. அடுத்து என்ன என்ற கேள்வியுடன் இடைவேளை .

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி யுவன் இசை படம் முழுக்க சொல்லி அடிக்கிறது.

காட்ச்சிக்கு என்ன தேவையோ அதைமட்டும் கொடுத்துள்ளார். படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். ரகுல் ப்ரீத் சிங் கன கச்சிதமான தேர்வு.

சூர்யாவும் யாவரும் இணைந்து வரும் காட்சி ரசிக்க வைக்கின்றன. வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.

குறிப்பாக “என் நெஞ்சில் குடி இருக்கும் முதுகெலும்பே” போன்ற வசனங்கள் செயற்கை தனமாக இல்லாமல் தேவையான வசனமாகவே தெரிகிறது. எடிட்டிங் நன்றாக செய்துள்ளனர். நீண்ட நாளைக்கு பிறகு ஒரு செல்வராகவன் படம். சண்டைகாட்சிகளை முடிந்த அளவு குறைத்துள்ளனர். ஒவ்வொரு காட்சியிலும் Lighting Effect வேற லெவல். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ஹிட்.

அன்பே பேரன்பே பாடல் காட்சியமைப்பு இன்னும் 10 வருடங்களுக்கு நின்று பேசும். புதைச்சாலும் புதையலா வருவாண்டா தீம் சூப்பர். ஜாலியாக விசில் அடித்து பார்க்கலாம்.

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
7.4

Good

Story - 8
Screenplay - 8
Direction - 8
Artist - 8
Music - 9
Cinematography - 8
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 8
- 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*