சிபிராஜ் படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குனர், ஆச்சரியத்தில் கோலிவுட்!!

V4U MEDIA [ Tue, Feb 25, 2020 ]

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிபிராஜ். அவருடன் நந்திதா ஸ்வேதா, சத்யராஜ் நாசர், ஜெயபிரகாஷ், தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார், மயில்சாமி ஆகியோரும் நடிக்கிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, சைமன் கே.சிங் இசை அமைக்கிறார்.

ஹேமந்த்ராவ் எழுதிய கதைக்கு ஜான் மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். இது கன்னடத்தில் வெளிவந்த காவலுதாரி என்ற படத்தின் ரீமேக் ஆகும். சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் ‛கபடதாரி' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

"கபடதாரி என்றால் பாசாங்குகாரன், வேஷக்காரன் என்று பொருள். படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் தமிழிலும் இருக்க வேண்டும் என முடிவு செய்து இந்த தலைப்பை தேர்வு செய்தோம்" என்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.தற்போது கபடதாரி படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிகராக இப்படத்தின் இயக்குனர் பிரதீப் அறிமுகமாகிறார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. Latest News