கதைக்கரு : கெளரவத்திற்காக தங்கள் வாரிசுகளுக்கு எப்படியாவது படிப்பை வாங்க முயலும் பணக்கார பெற்றோரால், நம் சமூகத்தில்  ஏற்படும்பி பிரச்சனைகளை பேசிடும் கருவோடு வந்திருக்கும் திரைப்படமே “நெஞ்சில் துணிவிருந்தால் ”

கதை : நாயகர் சந்தீப்பின் தந்தையான போலீஸ் ஏட்டு சிவா,ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், அங்கு தவறான ஆபரேஷன் காரணமாக அவர் எதிர்பாராது இறந்து போகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டரால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அந்த டாக்டருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள். பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். கூடவே ,தன் தங்கையை டாக்டருக்கும் படிக்க வைக்கிறார். சந்திப்பின் நண்பர்களில் ஒருவரான விக்ராந்த், சந்தீப்பின் டாக்டர் தங்கையை சந்தீப்புக்கும், அவரது தாய் துளசிக்கும் தெரியாமல் காதலித்து வருகிறார். இந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், ஐம்பது கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு விக்ராந்தையும்,சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்யதிட்டமிடுகிறார். இறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பி பிழைத்தார்களா? அந்த ஜோடிக்கு ஐம்பது கோடி ஆஃபர் எதற்காக? யார் தருகிறார்கள் ? தங்கையையும் , நண்பனனயும், தாதா ஹரிஷ்உத்தமனிடமிருந்து நாயகர் சந்திப்கிஷன் எப்படி காப்பாற்றுகிறார்.? என்பது தான் “நெஞ்சில் துணிவிருந்தால் ” படத்தின் கதை.

கதாநாயகர்கள் : சந்தீப், தனது முந்தைய படமான “மாநகரம் ” படத்தைக் காட்டிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இரண்டாவது கதாநாயகன் விக்ராந்த்,  நாயகனுக்கு நண்பனாக நடித்திருக்கிறார்.

வில்லன் : வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன் வில்லன் கதாபாத்திரத்தில் முடிந்த அளவு ஒன்றி நடிக்க முயற்சித்திருக்கிறார்ட். நடை, உடை பாவனையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தொழில்நுட்பகலைஞர்கள் : மூ. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பில் சற்று நீளம் குறைக்கப்பட்டிருக்கலாம். ஜெ. லட்சுமணின் ஒளிப்பதிவு, ஒ.கே.பதிவு . டி.இமான் இசையில், பின்னணி இசையிலும் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இயக்கம் :சுசீந்திரன் தன் எழுத்து , இயக்கத்தில் , “வெண்ணிலா கபடிக் குழு, “நான் மகான் அல்ல”, “அழகர்சாமியின் குதிரை ” ,”ஆதலால் காதல் செய்வீர்”, “பாண்டியநாடு, “, “ஜீவா” “மாவீரன் கிட்டு ” போல சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார். ஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கொலை , கொள்ளை என திரைக்கதை ஏகத்துக்கும் தாவி, அவரது இயக்கத்தில் லாஜிக் இல்லாமல் வந்து , வந்த சுவடு தெரியாமல் போன “ராஜாபாட்டை ” மாதிரி, சுமாராயிருப்பது பெரும் குறை.

7.7

Good

Story - 7
Screenplay - 8
Direction - 8
Artist - 8
Music - 7
Cinematography - 7
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*