நீயா 2  (24/05/2019) ல் வெளியாகி இருக்கும் திரைப்படம், கமல் நடித்த நீயா படத்தின் பெயரை கொண்டு வெளியாகி உள்ளது என்பதால் எதிர்பார்ப்பு சற்று அதிகம்.

இயக்குனர் L.சுரேஷ் இயக்கம். ஜெய், வரலக்ஷ்மி, கேத்ரின் தெரசா, ராய்லக்ஷ்மி ஆகியோர் நடிப்பில் ஒரு பாம்பு படம்.

neeya 2

விக்ரம் கதாப்பாத்திரத்தில் ஜெய் பளிச் ரகம். கேத்ரின் தெரசா, ராய்லக்ஷ்மி இருவரும் கவர்ச்சியை அள்ளி கொடுத்துள்ளனர் என்பது உபதகவல்,

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும் அதை புதுவிதமாக தர முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். ஆனால் ஒவ்வொருவருக்கும் இரண்டு பெயர்கள்… ஒட்டாமல் வரும் சில காட்சிகள், தேவையில்லாமல் வரும் பாடல்கள் நம்மை சோதிக்கவே செய்கின்றன.

neeya 2 movie

இரண்டு ராஜ நாகத்திற்க்கும் வரும் சண்டை காட்சியில் CG வொர்க் செம. அடிக்கடி ஒவ்வொருவரது முகமும் பாம்பாக மாறும்காட்சி பார்க்க நன்றாக இருக்கிறது.

கதையில் சற்று குழப்பம் தென்படுவது நமக்குதானா அல்லது இயக்குனர்கே ஏற்பட்டதா என்பது பெரிய கேள்வி.?

கேமரா வொர்க் நன்றாக மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது. ஆனால் சில இடங்களில் CG படத்தோடு சேராமல் கார்ட்டூன் சேனல் பார்பதுபோல் இருக்கிறது.

சற்று சுருக்கமாக சொல்லவேண்டிய காட்சிகளை வேண்டுமென்றே நீளமாக வைத்துள்ளது ஏன் என தெரியவில்லை. வரலஷ்மி நல்ல தேர்வு ஆனால் முகம்தான் அடிக்கடி மிட்டாயை பிடுங்கி சாப்பிடுவதுபோல் இருக்கிறது.

ஒரு முறை பாக்கலாம்!

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
5

Average

Story - 5
Screenplay - 5
Direction - 5
Artist - 6
Music - 5
Cinematography - 6
Editing - 6
Stunt - 6
Dance - 6
Art - 5
- 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*