Mr. லோக்கல் விமர்சனம்

இயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே ஒரு சில முக்கியமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அந்த விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கூற முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி அவர் எடுத்துள்ள படம் Mr. லோக்கல்.

சரி லோக்கலாக சிவகார்த்திகேயன் எப்படி கலக்கியுள்ளார் என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

சிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சிவகார்த்திகேயன் அம்மா ராதிகா ஒரு சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.

அவரை அழைத்துக்கொண்டு அந்த நடிகையிடம் பார்க்க போக, அப்போது நயன்தாரா அவர்களை காரில் இடித்துவிடுகிறார்.

அப்போது தொடங்குகிறது இருவருக்குமான மோதல், பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சிவா கடந்த அனைத்து படங்களிலும் எப்படி ஹீரோயின் பின்னாடியே சுற்றுவாரோ அதேபோல் தான் இதிலும், என்ன ஒரு படி மேலே சென்று படம் முழுவதும் நயன்தாராவை டார்ச்சர் செய்கிறார்,
ராஜேஸ் படம் என்றாலே காமெடி என்று நம்பி போகலாம், ஆனால், இந்த படம் சற்று ஏமாற்றத்தை தந்தது என்றே சொல்லலாம் ரோபோ ஷங்கர் பொண்டாட்டியிடம் அடிவாங்கும் ஒரு காட்சியை தவிர படத்தில் எங்கு தேடினாலும் காமெடி இல்லை. யோகிபாபு காமெடி கூட ரசிக்கும்படியாக இல்லை .

நயன்தாரா பல பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார், அதற்கு ஏற்றார் போல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த இவர், இதில் ஒரு நீலாம்பரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் .

ஹிப்ஹாப் ஆதிபாடல்கள் ஓரளவு மட்டுமே ரசிக்கும்படியாக உள்ளது , ஒளிப்பதிவு மட்டுமே கலர்புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் .

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
5.1

Average

Story - 5
Screenplay - 5
Direction - 5
Artist - 6
Music - 5
Cinematography - 6
Editing - 6
Stunt - 6
Dance - 6
Art - 5
- 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*