“மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.


முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் “மேயாத மான்” திரைப்படம் வடச்சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதையாகும். இத்திரைப்படத்தில் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க ரத்ன குமார் இயக்கியுள்ளார். முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரபல திரைப்பாடகர் பிரதீப் குமார் இணைந்து இசையமைகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து விவேக் வேல்முருகன் வரிகளில் அந்தோணி தாசன் பாடிய “தங்கச்சி பாடல்” முதலில் வெளியிடப்பட்டது. இரண்டாவதாக பிரதீப் குமார் எழுதி பாடி இசையமைத்த “என்ன நான் செய்வேன்” பாடல் வெளியிடப்பட்டது. மூன்றாவதாக விவேக் வேல்முருகன் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய “அடியே எஸ்.மது” பாடல் வெளியிடப்பட்டது. இம்மூன்று பாடல்களும் மக்கள் மத்தியிலும் இணையதளங்களிலும் பெரும் வரவேற்ப்பை தொடர்ந்து பெற்று வருகின்றன.

இதனை அடுத்து இப்படத்தின் முழு பாடல் ஆல்பத்தை வெளியிட நாங்கள் ஆவலாக உள்ளோம். லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களின் “Ovations” நிகழ்ச்சியில் இதனை வெளியிட இருக்கிறோம். இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தங்கள் புகைப்பட வீடியோ நண்பர்களுடன் வருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். இந்த இசை வெளியீடு நிகழ்ச்சி நேரலையாக Think Music YouTube சேனலில் ஒளிப்பரப்படும். இதற்கான காணொளி லிங்க் இந்நிகழ்ச்சியின் துவக்கத்தின் முன்னரே தங்களிடம் கொடுக்கப்படும். இந்த இசை வெளியீடு நிகழ்ச்சி முடிந்த இரண்டு மணி நேரத்துக்குள் அதன் சம்மந்தமான வீடியோ தொகுப்பு தங்களை வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*