கதைக்கரு :
அனைவருக்கும் இலவச மருத்துவமும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்ற சமுதாய கருத்தினை கருவாக கொண்டு மெர்சல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம் :

வெற்றிமாறனாக வரும் தளபதி விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுக்கு மாறன், வெற்றி என்று இரு மகன்கள் பிறக்கின்றனர். ஒரு கட்டத்தில் தளபதி விஜய் மற்றும் நித்யா மேனன் கொல்லப்படுகின்றனர். தன் தாய் தந்தை சாவுக்கு காரணமானவர்களை  இருவரும் பழிவாங்குவதே மெர்சல் படத்தின் கதை.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அட்லியின் கதை , இயக்கத்தில் , விஜய் , காஜல்அகர்வால் , சமந்தா, நித்யா மேனன் , வடிவேலு , சத்யராஜ் , எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளனர். தேனாண்டாள் பட நிறுவனம் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் “மெர்சல்” படத்தில் மருத்துவ துறை ஊழல்களை  மிக அழகாக காட்சப்டுத்தியுள்ளனர்.

விஜய் நடிப்பில் வேற லெவல் காட்டியிருக்கிறார். நடனம், சண்டை என அனைத்திலும் அடுத்த தளத்திற்கு சென்று விட்டார். மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையில் இருக்கும் சிறு சிறு வித்தியாசங்களில் கூட நுனுக்கமான நடிப்பை காட்டியிருக்கிறார்.

மூன்று கதாநாயகிகளும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கட்சிதமாக செய்துள்ளனர். நித்யா மேனன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா கதா நாயகனுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை பெறுகிறார்.

நிறைகள்:

1. ஏ.ஆர்.ரகுமானின் இசை
2. ஜி.கே.விஷ்னு ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் படத்தொகுப்பு
3. அட்லீயின் திரைக்கதை

மூத்த நடிகர்களான சத்யராஜ் மற்றும் கோவை சரளாவின் கதாபாத்திரங்களின் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் மெர்சல் தளபதி ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

8.1

Great

Story - 7
Screenplay - 8
Direction - 7
Artist - 8
Music - 9
Cinematography - 9
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*