மீரா கதிரவனின் ‘விழித்திரு’ அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது. .

‘அவள் பெயர் தமிழரசி’ படத்திற்கு பிறகு  எழுத்தாளர் மீரா கதிரவன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘விழித்திரு’. ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, S.P. சரண்,  வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா, எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன், சி.சத்யா மற்றும் அல்போன்ஸ் என ஏழு இசையமைப்பாளர்கள் 6 பாடல்கள் பாடியுள்ளனர். சத்யன் மகாலிங்கம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சென்ற வருடம் வெளிவர வேண்டிய இப்படம் சில பொருளாதார பிரச்சனைகளால் தள்ளிப்போன நிலையில், தற்போது இப்படத்தை சௌந்தர்யா பிக்சர்ஸ் சார்பில் ‘விடியல் ராஜூ’ வெளியிடுகிறார். இவர் தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை இவர் தயாரித்து நடித்த ‘ஆள்’ படத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘விழித்திரு’ வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*