Mannar Vagaiyara Movie Review By V4umedia

mannar vagaiyara movie review by v4umedia

Mannar Vagaiyara Movie Review By V4umedia

பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா.

 

படத்தின் கதாநாயகன் விமல் சட்டம் படிப்பு படித்து வருகிறார். அதில் தான் அவருக்கு சிக்கல். ஆனாலும் அதை விட பெரும் சிக்கல் படத்தில் அவருக்கு உள்ளது. இவரின் மாமாவாக மட்டுமல்லாமல் நண்பனாக ரோபோ சங்கர் கூடவே இருக்கிறார். படம் முழுக்க இவர்கள் தான்.

 

ஊரில் மதிக்கத்தக்க தலைவராக இருக்கும் பிரபு மற்றும் அவரின் மனைவி மீரா கிருஷ்ணனுக்கு கார்த்திக், விமல் என இரு ஆண் பிள்ளைகள். பெரிய வகையறா தான்.

 

அதே போல ஊரில் மிரட்டல் ஆளாக இருக்கிறார் வம்சி கிருஷ்ணா. இவருக்கு சாந்தினி, கயல் ஆனந்தி என இரு தங்கைகள். இவர்களின் அம்மா, அப்பாவாக சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ் இருக்கிறார்கள்.

 

இதற்கிடையில் ஊர் விசயத்தில் வில்லனுக்கும் பிரபுவின் குடும்பத்திற்கும் ஒரு பகை. அதே நேரத்தில் பெரும் பின்னணிக்கு இடையே வில்லனின் தம்பிக்கும் சரண்யாவின் மூத்த மகளுக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது.

 

முகூர்த்த நேரத்தில் மணமகள் கடத்தப்படுகிறார். அவரை கடத்தியது முக்கியமான ஒருவர். ஒரு பக்கம் விமலின் அண்ணன் கார்த்திக் விசம் குடித்து உயிருக்கு போராடுகிறார். கதை இப்படியே நகர்கிறது.

 

இதற்கிடையில் விமல், ஆனந்தி இருவருக்கும் காதல் ஓடிக்கொண்டிருக்கிறது. வில்லனால் விமல் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

 

விமல் பிழைத்தாரா, அவரது அண்ணனுக்கு என்னானது, கயல் ஆனந்தியின் காதல் கைகூடிதா, மணமகளை கடத்தியது யார் என்பது தான் மீதி கதை.

பிரபுவுக்கு படத்தின் கௌரவமான வேடம். ஊர் தலைவராக மட்டுமில்லாமல் ஒரு குடுமபத்தலைவராக பிரச்சனையான சமயங்களில் பொறுமை காப்பது இவரின் இயல்பு.

 

ஹீரோயின் கயல் ஆனந்தி இப்படத்தில் தன் தோழிகளுடன் சேர்ந்து வீட்டிலும் காலேஜிலும் குறும்பு செய்யும் கடைக்குட்டி பெண். விமலை வைத்து இவர் விளையாட்டு காட்ட கடைசியில் காதலாகி விடுகிறது.

 

ஒரு கட்டத்தில் தன் ஆசையை தூக்கி வைத்துவிட்டு இவர் துணிவாக எடுத்த முடிவு எதார்த்தம். தன் திருமணத்தின் போது ஆள் மாயமாகிவிடுகிறார். எங்கு சென்றார் என்பது ட்விஸ்ட்.

 

அம்மா கேரக்டருக்கு பெயர் பெற்ற சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் தன் குறும்பு கலந்த நடிப்போடு பாசத்தை காட்டுகிறார். ஆனால் ஒரு சம்பவத்தால் மனம் உடைந்து போகிரார்.

 

அப்படி என்ன இவரின் மனதிற்குள் என்பதை படத்தில் பாருங்கள்.மேலும் படத்தில் சிங்கம் புலி, விமல் குடும்பத்தில் இருந்து டைமிங் பஞ்ச் அடித்து சிரிக்க வைப்பது ரொம்பவே நல்லா இருக்கு.படத்தின் இறுதியில் வந்து சரமாரியாக காமெடி பண்றாரு நம்மம யோகி பாபு.பழைய நடிகர், நடிகைகள் மற்றும் நடித்த அனைவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிபடுத்தி உள்ளனர்.படத்தில் வரும் காமெடி தான் மெயின். ரோபோ சங்கர் கரெக்டான கவுண்டர். மற்றும் முக்கியாமாக ஜாதி பற்றி சரியான பஞ்ச் டயலாக் பேசியிருப்பாரு.

பின்னணி திரும்ப திரும்ப கேக்க ஒரே மாதிரியான இசையாக இருந்தாலும் படத்தில் எளிமையாக ,அருமையாக இருந்தது.

 

Rating ; 2.75/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*