நடிகையர் திலகம் விமர்சனம் !

நடிகர்/நடிகைகள்: கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா மற்றும் பலர்

இயக்கம்: நாக் அஸ்வின்

இசை: மிக்கி ஜே. மேயர்

தயாரிப்பு: வைஜெயந்தி மூவீஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா

கதை:

உடல்நிலை சரியில்லாத நிலையில் சாவித்ரி மருத்துவமனையில் சேர்க்கும் காட்சியில் துவங்குகிறது நடிகையர் திலகம். பத்திரிக்கையாளராக வரும் சமந்தாவிற்கு சாவித்ரியை பற்றி கட்டுரை எழுதும் பொறுப்பு வருகிறது. இவருடன் புகைப்பட கலைஞராக வருகிறார் விஜய் தேவரகொண்டா. இவர்கள் சாவித்ரியை பற்றி தெரிந்த ஒவ்வொருவரிடமும் சென்று சேகரிக்கும் நிகழ்வுகளைக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. தந்தையை இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுமியாக இருக்கும் சாவித்ரி, பெத்த நைனா ஆதரவில் வளர்கிறார்.

சிறு வயது முதலே நாடகத்தில் ஆர்வமாக இருந்த சாவித்ரி சின்ன சின்ன நாடங்களை அரகேற்றி வருகிறார். ஆனால், இதன் மூலம் பெரிதாக வளர்ச்சியில்லை என்றபிறகு நடிப்பைத் தேடி சென்னை வருகிறார். அங்கு அவருக்கு கிடைக்கும் வாய்புகள், பிறகு ஜெமினியுடன் ஏற்படும் காதல், திருமணம் என்று மாறுகிறது சாவித்ரியின் வாழ்க்கை, நடிப்பில் மகுடமாய் பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சாவித்ரி இயக்குனராக சாதித்து தாயாரிப்பாளராக தோற்று பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறார். பிறகு ஏற்படும் துரோகத்தால் ஜெமினியை விட்டு பிரிந்து மதுவிற்கு அடிமையான வாழ்வின் இறுதி கட்டங்கள் என சாவித்ரியின் அனைத்து வாழ்க்கை நிகவுகளும் அழகாக படமாகியிருக்கிறது.

நடிகையர் திலகம் திரைப்பட விமர்சனம்

மக்கள் கருத்து:
இப்படத்தை பார்த்த அனைவரும் சொல்லும் ஒரு வார்த்தை கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார். நூற்றுக்கு நூறு உண்மை, ஒரு சாதனைபடைத்த நடிகையின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது என்பது மிகப்பெரிய சவால். அதையேற்று வெற்றி கண்டிருப்பது பாராட்டக்கூறிய செயல்.கீர்த்தி சுரேஷின் நடிப்பும், மேக்கப் கலைஞர்களின் உழைப்பும் இப்படத்தின் தூண்களாக அமைந்துள்ளது. ஒரு பாதிக்கு மேல் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவே நம் கண்களில் தெரிவது இப்படத்தின் முதல் வெற்றி.

ஜெமினி கணேசனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான், இந்த கதாப்பாதிரமும் சவாலானது தான், காதல் மன்னனாக வலம் வந்தாலும் ஒரு கட்டத்தில் சாவித்ரியின் மது அடிமைக்கு இவரும் காரணமாவது இதுபோன்ற கதாப்பாத்திரத்தை தைரியமாக ஒப்புக்கொண்டு நடித்திருப்பது பாராட்டுக்குரிய செயலாகும். சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா வரும் காட்சிகள் கொஞ்சம் சலிப்பானாலும் கிளைமாக்சில் சமந்தா சாவித்ரியிடம் பேசும் காட்சி நெகிழ வைக்கும்.

படத்தின் இசை மிக்கி ஜே.மேயர், அருமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசை. ஒளிப்பதிவு படத்தின் பலம். ஆக மொத்தத்தில், இயக்குனர் நாக் அஸ்வின், சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நல்லதை மட்டும் சொல்லாமல் மற்றவர்கள் சொல்ல தயங்கிய (ஜெமினி சம்பத்தப்பட்ட) தைரியாமாக சொல்லியிருக்கிறார். அனைவரும் பார்க்ககூடிய நல்ல படம் இந்த நடிகையர் திலகம்.

6.6

Fair

Story - 8
Screenplay - 7
Direction - 7
Artist - 6
Music - 7
Cinematography - 8
Editing - 7
Stunt - 7
Dance - 7
Art - 9
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*