படம் பார்த்துவிட்டு தோழிகளை முகப்புத்தகத்தில் தேடும் பெண்கள் – மகளிர் மட்டும் எஃபெக்ட்.

பெண்களை மையமாகக் கொண்டு பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும், மகளிரின் உணர்வு சார்ந்த விஷயங்களை விவாதிக்கும் படங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் திருமணமான ஒரு குடும்ப பெண்ணின் வாழ்க்கையை காண்பித்திருந்தனர்.

இப்போது அதே வரிசையில் மற்றொரு தரமான படமாக மகளிர் மட்டும் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கிறது. மகளிர் மட்டும் வெளியான முதல் மூன்று நாட்களுக்குள் படம் பார்த்த 3000 பேருக்கு பட்டு சேலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்துவிட்டு பெண்கள் தங்கள் தோழிகளை பேஸ்புக்கில் தேடி வருகிறார்கள். பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தங்கள் நண்பர்களை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தேடி வருகிறார்கள். தரமான படத்தை தயாரித்துள்ளதாக சூர்யா மற்றும் 2D Entertainment நிறுவனத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*