‘லென்ஸ்’ உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவானது – இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இப்படத்தின் கதை உருவான விதம் பற்றி ?

நான் ஒரு நடிகன், U.S யில் சாப்ட்வேர் துறையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பொழுது , நடிப்பிற்கான பயிற்சியும் மேற்கொண்டேன். அப்போது என்னுடைய ஆசிரியர் ஒருவருடன் சென்னையில் இருந்தபோது ஸ்கைப் வீடியோ கால் பேசும் போது தோன்றிய ஐடியா தான் லென்ஸ் படத்தின் கதை. எனினும் அப்போது  நடிப்பில் கவனம் செலுத்தியதால் கதையில் கவனம் இல்லை. தற்போது அந்த எண்ணம் கதையாக உருவாகிவிட்டது.

லென்ஸ் படத்தின் தலைப்பு பற்றி ?
பொதுவாகவே மக்களுக்கு மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை உற்றுநோக்கி அறிந்து கொள்வதில் ஒரு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் மக்களின் இந்த மாதிரியான எண்ணங்களும் நவீன தொழில்னுட்பங்களும் எவ்வாறு ஒரு மனிதனின் வாழ்வைப் பாதிக்கின்றன என்பதை சொல்லும் படம் என்பதால் லென்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டது.

லென்ஸ் படம் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் ?

படத்தின் கதைக்கு உண்மையாக இருந்து இப்படத்தை எடுத்துள்ளேன். சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஆபத்துகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கதையின் திரைக்கதையை ஆழமாக வடிவமைத்துள்ளேன். மக்களுக்கு புடிக்கும் புடிக்காது என்ற கவனத்தில் காட்சிகளை வடிவமைக்காமல் படத்தின் கருத்தினை மாறாமல் சொல்லும் வகையில் காட்சிகள் வடிவமைத்திருக்கிறேன். எனவே தான் மற்றப் படங்களை போல் சண்டை மற்றும் காமெடி காட்சிகளை தவிர்த்து கதைக்கு மட்டுமே தேவையான காட்சிகளை கொண்டு லென்ஸ் உருவாகியுள்ளது.

படத்தின் கதாநாயகன் பற்றி?

படத்தின் கதையை எழுதும் போதே ஆனந்த் சாமியை மனதில் வைத்திருந்தேன். 15 வருடமாக தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்று நினைத்தேன், மேலும் அவருக்கு கதை பிடித்திருந்ததால் அவர் நடிக்க சம்மதித்தார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றி?

ஒளிப்பதிவு இப்படத்தின் நாடி நரம்பு என்று சொல்லலாம். படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்ட பின், நல்ல தொழில்னுட்ப கலைஞருக்காக காத்திருந்தேன். அப்போது தான் கதிர் அவர்களின் அறிமுகம் கிடைக்க படத்தின் ஒன்லைன் கேட்ட உடனேயே அவர் இப்படத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருந்ததால் அவசர அவசரமாக மூன்று மாதங்களுக்குள் லென்ஸ் படத்திற்கான பணியை செய்து முடித்தார்.

படத்தின் இசையமைப்பாளர் பற்றி?

இரண்டு இசையமைப்பாளர்கள். சித்தார்த் விபின் இங்கிலீஷ் வெர்ஷனுக்கான இசையை அமைத்துள்ளார். தமிழ் வெர்ஷன் படத்திற்கு ஜி.வி இசையமைத்துள்ளார். மேலும் தமிழில் ஒரு பாடலும் சேர்த்துள்ளோம். நன்றாக வந்துள்ளது.

படத்தை பார்த்து யாரேனும் பாராட்டி உள்ளார்களா ?

பட விழாக்களில் சட்டக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் படத்தை பார்த்து பாரட்டிவிட்டு தனது கல்லூரியில் திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இரு கல்லூரி மாணவர்களும் கேட்டுக் கொண்டனர். ரிலீசிற்கு பிறகு பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது.

இப்படம் ஏதேனும் உண்மை சம்வங்களை கொண்டுள்ளதா ?

அமேண்டா டாட் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு வாலிபரோடு நட்பாகி தன் அந்தரக்கத்தை அவருடன் பகிர்ந்து கொள்கிறார். அதை அந்த வாலிபர் அணைவருக்கும் பகிர்ந்துள்ளார்.  இதனால் மனமுடைந்த அப்பெண் அந்த வாலிபருடம் வீடியோ உரையாடலின் போதே தற்கொலை செய்து கொள்கிறார். இந்த கதையை அடிப்படையாக வைத்து தான் லென்ஸ் உருவாகியுள்ளது.
எனினும் படத்தின் கதாபாத்திரத்திற்கு அதில் நடித்த நடிகர்களின்  நடிப்பே உயிர்கொடுத்துள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் பற்றி ?

இப்படத்தின் மிகப்பெரிய பலம் வெற்றிமாறன் அவர்கள் இப்படத்தை வெளியிடுவது தான். பட விழாக்களில் படங்களை திரையிடும் போதே அவரை பார்க்க நிறைய முயற்சி செய்தேன். படத்தை டி.வி.டி.யில் பார்த்த வெற்றிமாறன் என்னை பாராட்டினார், சரியான நேரத்திற்காக பொறுமையாக காத்திருக்க அறிவுரை வழங்கினார்.ஒரு வருடத்திற்கு பிறகு லென்ஸ் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படம் வாலிபர்களுக்கும் பெண்களுக்கும், குறிப்பாக சமூக வலைத்தளங்களை அதிகம் உபயோகப்படுத்துவோருக்கும் அதன் ஆபத்தினை எடுத்துரைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. லென்ஸ் போன்ற நல்ல படத்திற்கான அங்கீகாரம் கிடைக்க, பார்வையாளர்களின் ஆதரவு வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*