kuttram 23 Movie Review

என்னை அறிந்தால் படத்தில் உடல் உறுப்புகளை திருடிய அருண் விஜய், அந்த வகையான குற்றங்களை தடுக்கும் ஒரு அதிரடி போலீஸீஸாக குற்றம் 23ல்.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய் இரண்டு வருடங்கள் இடைவெளி விட்டு இருந்தார்.இந்த இரண்டு வருடங்களில் தனது கதைகளை தேர்ந்தெடுப்பதில் முழு கவனமாக இருந்தார். அப்படி அவர் தேர்ந்த்தெடுத்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்து தற்போது  வெளிவந்திருக்கும் படம்தான் குற்றம் 23.

படத்தின் ஆரம்பத்தில்  சர்ச்சில்  ஒரு கொலை நடக்கிறது அந்த கொலைக்கான விசாரணையை அருண் விஜய் எடுக்க,அந்த கொலையை நேரில் பார்த்த மஹிமா நம்பியாரை விசாரிக்க செல்கையில் மஹிமா நம்பியாருக்கும்,அருண் விஜய்க்கும் இடையே காதல் மலர்கிறது.இதற்கிடையில் அருண் விஜயின் அண்ணியாக வரும் அபிநயா கொலை செய்ய படுகிறார்.இதற்கு முன்னர் நடந்த கொலைகளும்,அபிநயாவின் கொலையும் ஒத்துபோக விசாரணையை தொடர்கிறார் அருண் விஜய். இறுதியில் கொலைக்கான காரணங்களையும் ,அந்த கொலையை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடித்தாரா,மஹிமாவுடன் சேர்ந்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை .

காக்கி சட்டை,என்னை அறிந்தால் போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் மெடிக்கல் மாஃபியா கதைதான்.மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் இப்படம் ஒரு புதுமையான கதை களத்தை  கொண்டுதான் இருக்கிறது.மேலும் செயற்கை முறையில் கரு தரிக்கும் மருத்துவமனைகளில் நடக்கும் சில மறைமுகமான சம்பவங்களை, சமுதாயத்திற்கு ஒரு கருத்தாக இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய் “வா டீல்” படம்தான் வெளிவரவிருந்தது, ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை,இப்படத்தின் மூலம் அருண் விஜய் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வரப்போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.அதேபோல் மஹிமா நம்பியாரும் இரண்டு வருடங்கள் கழித்து இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.இதற்கு முன் அவர் நடித்த படங்களை விட இந்த படத்தில் ஒரு அழகு பதுமையாக வருகிறார்.அருண் விஜயின் அண்ணியாக வரும் அபிநயாவும் தனது வழக்கமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

போலீசாக வரும் தம்பி ராமையாவின் காமெடி சிரிக்கும் படி இருந்தாலும் இறுதியில் அவர் செய்யும் ஒரு காமெடி அனைவரையும் கை தட்ட வைக்கிறது. வம்சி கிருஷ்ணா தெலுங்கில் பிசியாக இருந்தாலும் அவ்வபோது தமிழிலும் நடித்து கொண்டிருக்கிறார் அதே போல் இப்படத்திலும் ஒரு அமைதியான வில்லனாக வந்து மிரட்டுகிறார்.

இவர்களை தவிர அமித் பார்கவ்,அரவிந்த் ஆகாஷ் என அனைவரும் தங்களுடைய நடிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இயக்குனர் அறிவழகன் படத்தில் எப்போதும் கட்சியமைப்புகளில் ஒரு வித்தியாசம் இருக்கும் இப்படத்திலும் காட்சியமைப்புகளில்  வித்யாசம்  காட்டியிருக்கிறார். சில்வாவின் சண்டை காட்சிகள் படத்திற்கு இன்னும் ஒரு பலத்தை சேர்த்திருக்கிறது.அதேபோல் பாஸ்கரனின் ஒளிப்பதிவும், புவனின் படத்தொகுப்பு இரண்டும் படத்திற்கு ரசிக்கும் படியாக உள்ளது.

படத்தின் கதைக்களம்,படத்தின் திரைக்கதை இப்படத்திற்கு பிளஸ் என்றே சொல்லலாம். அதைத்தவிர அருண் விஜய்யின் நடிப்பு,தம்பி ராமையாவின் காமெடிகள்.மேலும் ஆரம்பம் முதல் முடிவு வரை அடுத்து என்ன என்ற ஒரு ஆர்வத்தை ரசிகர்களிடத்தில் வைத்திருக்கிறது.

ஆக்ஷன் படம் என்பதால் சண்டை காட்சிகளை சினிமா தனமாக வைக்காமல் கொஞ்சம் தத்ரூபமாக காட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் இந்த குற்றம் 23,  படம் முடிந்து வெளியே வரும்போது திரையரங்கில் கொடுத்த தொகை வீன் போகவில்லை என்ற திருப்தி உங்களுக்கு இருக்கும்.

7.5

Good

Story - 7.5
Screenplay - 7.5
Direction - 7.5
Music - 7.5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*