Kavan Movie Review

தமிழ் சினிமாவில்  ஊடகங்களை மையமாக வைத்து படங்கள் வருவது குறைவுதான்.அந்த வகையில் ஏற்கனவே முதல்வன்,கோ மாதிரியான படங்கள் வந்திருந்தாலும் அவை ஊடகங்களின் பெருமைகளை சொல்லும் படி இருந்தன.ஆனால் ஊடகங்களில் தற்போது  நடக்கும் வியாபாரங்களை பற்றியும்,அதில் நடக்கும் முறைகேடுகளையும் சொல்லும் விதமாக  இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி,டி.ராஜேந்தர்,மடோனா செபாஸ்ட்டின் நடித்து  தற்போது வெளிவந்திருக்கும் படம்தான் கவண்.
படம் எப்படி உள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பாப்போம்.
கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும்  விஜய் சேதுபதியும்,மடோனாவும் ஆரம்பம் முதலே காதலர்களாக வருகின்றனர்.அதன் பின் சில மனகசப்பின் காரணமாக பிரிந்து விட, பின்னர் சில நாட்கள் கழித்து மடோனா வேலை செய்யும் தொலைக்காட்சியிலேயே வேலைக்கு சேர்கிறார் விஜய் சேதுபதி.இயற்கையை காப்பாற்ற போராடும்  விக்ராந்தும் அவரது தோழியும் அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு தான் வேலை செய்யும் தொலைக்காட்சி மூலம்  உண்மையை வெளியுலகிற்கு சொல்ல நினைக்கிறார் விஜய் சேதுபதி, ஆனால் தொலைகாட்சியின் உரிமையாளரான ஆகாஷ் தீப் அதை வியாபாரமாக மாற்றுகிறார் இதனால் விஜய் சேதுபதி அவர்களை எதிர்த்து வெளியேறி டி .ராஜேந்தரின் ஒரு சிறிய ஊடகத்தில்  இணைகிறார்.அதன்பின் விஜய் சேதுபதி அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றாரா,இதனால் டி.ராஜேந்தருக்கு என்ன பிரச்சனைகள் வந்தன,விக்ராந்துக்கும்  அவரது தோழிக்கும் நியாயம் கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய்சேதுபதிக்கு இந்த வருடத்தின் முதல் படமே அவருக்கு ஒரு வெற்றியை கொடுத்து விட்டது.தனது மற்ற படங்களை போலவே இப்படத்திலும் நடிப்பில் ஒரு யதார்த்தத்தை கொடுத்துள்ளார்.அதைத்தவிர தோற்றத்திலும் இக்காலத்திற்கு ஏற்ற இளைஞனாக வருகிறார் விஜய்சேதுபதி. காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு மடோனா செபஸ்ட்டின் இப்படத்தின் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கிறார்.அனால் அப்படத்தை போல் இல்லாமல்  இப்படத்தில் மடோனாவின் பின்னால் தான் விஜய் சேதுபதி சுற்றுகிறார்.  டி.ஆர் தான் தன் வழக்கமான வாழ்க்கையில்  எப்படியோ அதே தான் படத்திலும், பட்டையை கிளப்புகின்றார்,இவர்களை தவிர பாண்டியராஜன்,ஜெகன்,போஸ் வெங்கட் ,வில்லனாக வரும் ஆகாஷ் தீப் , மற்றும் நாசர் என அனைவரும் தங்கள் நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.
தான் இயக்கும் படங்களில் கமர்ஷியலோடு கலந்து எதார்த்த கதையினை தொழில் நுட்பத்துடன் இயக்கும் கே.வி ஆனந்த் தமிழ் திரையுலகில் இயக்குனர் சங்கருக்கு அடுத்த படியாக மிகவும் தேடப்படும் இயக்குனராக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் நபராக உள்ளார். இயக்குனர் கே.வி.ஆனந்த் பத்திரிகை துறையில் இருந்து சினிமாவிற்கு வந்ததனால் என்னவோ இப்படத்தில் சில ஊடகங்களில்  குறிப்பாக தொலைக்காட்சி மீடியாக்கள் தங்கள் சேனல் பரபரப்பு குறையகூடாது என்பதற்காக செய்யும் பித்தாலட்டங்களை வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.அதேபோல் படம் முன்பே எடுத்திருந்தாலும், தற்போதுள்ள  மக்கள்  மனநிலையில் இருப்பது படத்தின் வெற்றிக்கு மேலும் உதவும்.ஹிப் ஹாப் ஆதியின் இசையில்   ரங்க ரக்கா பாட்டு அனைவரையும் ரசிக்க வைக்கிறது.அதே போல் ஆண்டனியின் படத்தொகுப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும் ஆரம்பம் முதல் முடிவு வரை கத்திரியை சரியான இடங்களில் வைத்துள்ளார்.
இப்படத்தின் நிறைகள் என்னவென்றால் தற்போதுள்ள சில ஊடகங்கள் trp க்காக செய்வதை வெளிப்பாயாக கட்டிட்டியி ருக்கும் இப்படத்தின் கதைக்களம் .
குறிப்பாக சில தொலைக்காட்சிகளில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் அழகான பெண்களை கடைசி ரவுண்ட் வரை எடுத்து செல்வதை வெளிப்படையாக காட்டியிருப்பது .பெரிய நடிகர்கள் மட்டுமில்லாமல் சிறிய நடிகர்களையும் சிறப்பாக நடிக்க வைத்த விதம்.
உண்மையை சொல்லும் இப்படத்தின் படத்தின் வசனங்கள்.
இப்படத்தின் குறைகள் என்னவென்றால் அடிக்கடி படத்தில் இருக்கும் டிவிஸ்டுகள் கொஞ்சம் நீளமாக காட்டுக்கிறது.
மொத்தத்தில் கவண் பெரிய பெரிய கண்ணாடிகளை வைத்து பிரம்மாண்டமாக கடைசி தரும் சில கார்ப்பரேட் மீடியாக்களின் உண்மையான பிம்பத்தை வெளியே காட்டுகிறது .
8.1

Great

Story - 8
Screenplay - 8
Direction - 8
Music - 8.5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*