Kanavu Variyam Movie Review

நினைவாகாமல் இருக்கும் பலரின் கனவுகளை எப்படி உற்பத்தி செய்யாலாம் என்பதை ஊக்கம் கொடுக்கும் வகையில் தற்போது வெளிவந்திருக்கும் படம்தான் கனவு வாரியம். இப்படம் வெளிவருவதர்க்கு முன்னரே இரண்டு சர்வதேச ரெமி விருதுகளை வென்றது என்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான் அதற்கான காரணங்களை இந்த விமர்சனத்தில் நாம் பார்ப்போம்.
படத்தின் கதை

ஆங்கிலத்தில் Dream Factory என்று சொல்லகூடிய இப்படத்தின் கதையானது “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்” என்ற வள்ளுவரின் குறலுக்கேற்ப எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் முயற்சியை விடக்கூடாது என்பதுதான் இப்படத்தின் மையகதை. மேலும் “De Centralisation” எனபடும் தேவையில்லாத பொருட்கள் என கருதும் பொருட்களை வைத்து நமக்கு தேவையான பொருட்களை தயாரிப்பதையும். ஒரு காலத்தில் தமிழகத்தில் நிலவி வந்த மின் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் தன் கிராமத்தை காக்க, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் தன்னுடைய ஆர்வத்தின் வழியாக அதற்கான தீர்வினை கண்டுபிடித்தாரா, மின்தட்டுப்பாட்டில் இருந்து தன் கிராமத்தை காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிகதை.
படத்தை பற்றிய ஒரு பார்வை

இயக்குனர் அருண் சிதம்பரம் அவரே இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம் என்பதால் நடிப்பிலும், இயக்கத்திலும் பெரிதும் கவனம் செலுத்தியிருக்கிறார். குறிபாக படத்தின் வசனங்கள் அனைத்தும் கைத்தட்டல் வாங்கும் அளவிற்க்கு படத்தின் வசனங்கள் உள்ளன. அனுபவம்தான் ஒருவனுக்கு நல்ல பாடத்தை கற்று தரும் என்பதையும் இப்படத்தின் மூலம் தெரிவுபடுத்தியிருக்கிறார். படத்தின் கதாநாயகி ஜியா சங்கர் இவருக்கும் இதுதான் முதல் படம் என்பதை அவர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது போல தன்னுடைய சிறப்பான நடிப்பினை இப்படத்தில் வெளிபடுத்தியுள்ளார்.

பல படங்களில் வில்லனாக வரும் யோக் ஜேபி இப்படத்தில் ஒரு மாறுபட்ட ரோலில் வருகிறார் இயற்க்கை விவசாயத்தின் பெருமையையும் அதன் பயன்களையும் சொல்லும்போது அனைவரின் மனதிலும் நின்றுவிடுகிறார். ஹீரோவை ஊக்கபடுத்தும் நூலகராக வரும் ஞானசம்பந்தம் தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிபடுத்தி அனைவரின் மனதிலும் நின்றுவிட்டார்.
இவர்களை தவிர பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜார்ஜ், இளவரசு என பல நட்சத்திர பட்டாளங்கள் தங்களுடைய பங்களிப்பை இப்படத்திற்க்கு சிறப்பாக அழித்துள்ளனர்.
ஷ்யாம் பெஞ்சமினின் இசையும், பின்னனி இசையும் படத்திற்க்கு பொருந்தும் விதமாக அமைந்துள்ளது. நாம் அனைவரும் மறந்த
சிறு வயது விளையாட்டுக்களை கல்லா, மண்னா பாடலின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவந்துருக்கிறார். மேலும் காகினின் படதொகுப்பும், செல்வகுமாரின் ஒளிபதிவும் படத்திற்க்கு இன்னும் பலம் சேர்த்துள்ளது.

படத்தின் நிறைகள்:

ஒரு புதுமையான கதையமைப்பு இப்படத்தின் முதல் வெற்றியாகும்.

புதுமைகளை கண்டுபிடிப்பதை ஊக்கப்படுதுவதும், சிறிய முயற்சிகள்தான் பெறிய வெற்றிகளை கொடுக்கும் என்பதை சொல்லும் விதமாக அமைந்திருப்பது.

இயற்க்கை விவசாயத்தின் பயன்களை சொல்லியிருப்பது இனி நம்மையும் விவசாயம் செய்ய வேண்டும் என்று யோசிக்க வைக்கும்.

படத்தின் குறைகள்:

சிறு சிறு குறைகள் இருந்தாலும் படத்தின் கதையும், திரை கதையும் அதை மறக்க செய்கிறது.

மொத்ததில் இந்த கனவு வாரியம் அனைவரின் கனவுகளையும் எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை எடுத்து கூறும் ஒரு நிஜ வாரியம்.

7.8

Good

Story - 8
Screenplay - 8
Direction - 7.5
Music - 7.5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*