களவாணி மாப்பிள்ளை சினிமா விமர்சனம்

ராஜேஸ்வரி மணிவாசகம் தயாரிப்பில் களவாணி மாப்பிள்ளை படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் காந்தி மணிவாசகம்.

ரேணுகா தன் மகன் தினேஷ் வாகனம் ஒட்டினால் கண்டம் என்று ஜோசியர் சொல்லியதால் மகனை எந்த வண்டியும் ஒட்ட அனுமதிக்காமல் வளர்த்து வருகிறார். பெரிய தொழிலதிபரான தேவயாணி தன் கணவர் ஆனந்தராஜ் வாகனம் ஒட்டத் தெரியும் என்று பொய் சொல்லி ஏமாற்றியதால் வீட்டில் மரியாதை இல்லாமல் டம்மியாக நடத்துகிறார். இவர்களின் மகள் அதிதி மேனனை காதலிக்கிறார் தினேஷ். தேவயாணி தினேஷிற்கு கார் ஒட்டத் தெரியும் என்று நினைத்து காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் ஆனந்தராஜ் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முயல்கிறார். மாமியார் தேவயாணியை தினேஷ் எப்படி சமாளிக்கிறார்? ஆனந்தராஜின் சதியை எப்படி முறியடிக்கிறார்? தினேஷ்-அதிதி மேனன் காதல் கை கூடியதா? என்பதே க்ளைமேக்ஸ்.

இதில் காமெடி கதாபாத்திரத்தில் திணறி நடித்திருக்கிறார் தினேஷ் ( தேவா), அழகு பதுமையாக வளம் வருகிறார் அதிதி மேனன் (துளசி), காமெடி நய்யாண்டி மாமனாராக ஆனந்த்ராஜ் (கார்மேகம்) கண்டிப்பான மாமியராக தேவயாணி(ராஜேஸ்வரி) அம்மாவாக ரேணுகா, மனோபாலா( டாக்டர்), மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன் (வணங்காமுடி), சாம்ஸ் (ஸ்டெப்னி ), முனீஸ்காந்த் ( வில்லங்கம் ) , ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோரின் நடிப்பு நகைச்சுவைக்கு உத்தரவாதம்.
சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவு காட்சிக்கோணங்களில் செம ரிச்சாக காட்டியிருக்கிறார்.

என்.ஆர். ரகுநந்தினின் இசையும், பிகேவின் எடிட்டிங்கும் கச்சிதம்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் காந்தி மணிவாசகம். மாமியார்-மருமகன் திரைக்கதையில், சிறு பிரச்னையை மையப்படுத்தி கமர்ஷியல் காமெடி சப்ஜெக்ட்டுடன் ஜாலியான பொழுதுபோக்கு படமாக இயக்கியிருக்கிறார் காந்தி மணிவாசகம். இவர் தந்தை இயக்குனர் மணிவாசகம் டிரெண்ட் ஃபார்மூலாவை இதிலும் கையாண்டு சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் காந்தி மணிவாசகம்.

மொத்தத்தில் களவாணி மாப்பிள்ளையை பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு செல்லலாம்.

6.6

Fair

Story - 7
Screenplay - 6
Direction - 6
Artist - 7
Music - 6
Cinematography - 7
Editing - 7
Stunt - 7
Dance - 7
Art - 7
- 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*