காற்றின் மொழி திரைப்பட விமர்சனம் !

மொழி படத்திற்கு பிறகு ஜோதிகா – ராதா மோகன் இணையும் திரைப்படம் காற்றின் மொழி. இப்படம் ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெற்றிப்பெற்ற ‘தும்ஹாரி சூலும்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். தனஞ்செயன் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன், விதார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். காற்றின் மொழி மக்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

கதை:

எக்ஸ்போர்ட் கம்மெனியில் வேலைபார்க்கும் பாலு(விதார்த்), அவரது மனைவி விஜயலட்சுமி(ஜோதிகா), இவர்களது மகன் சித்து(தேஜஸ் கிருஷ்ணா) என அளவான, அழகான குடும்பம். ஜோதிகாவிற்கு, வீட்டிலே அடைந்து கிடைக்காமல், தானும் பிடித்த வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை. இப்படி இருக்கையில் எதிர்ப்பாராத விதமாக எப்.எம் ஸ்டேஷனில் ஆர்.ஜேவாக வேலைக் கிடைக்கிறது. அதுவும் இரவு 1௦ மணிக்கு தான் வேலை. இந்த வேலை ஜோதிகாவின் வாழ்வில் சந்தோசத்தை கொடுத்ததா? கெடுத்ததா? என்பதே மீதிக் கதை.

மக்கள் கருத்து:

திருமணத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா தனது கதாப்பாத்திர தேர்வில் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறார் என்பது அவரது படங்களின் மூலம் வெளிப்படுகிறது. அந்த வரிசையில் ‘காற்றின் மொழி’ விஜயலட்சுமி அவருக்கே உரித்தான கதாப்பாத்திரம் போல திரையை ஆள்கிறார். சின்ன சின்ன முக அசைவுகள், காமெடி காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்திலும் ஒரு கைப் பார்த்துள்ளார் ஜோ. ஓவர் அக்டிங் என அவரே கூறினாலும் சில விஷயங்கள் அவர் செய்தால் மட்டுமே அழகு. ராதா மோகன் படம் என்றால் கண்டிப்பாக குடும்ப உறவுகள், மனதை அழுத்தும் திரைக்கதை என அழகான திரை உணர்வை கொடுப்பவர். இப்படத்திலும் அந்த விஷயங்கள் உள்ளது ஆனால், இப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் என ஓரிரு முகசுளிப்பு காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கணவராக வரும் விதார்த், அவருக்கான கதாப்பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார். இவருக்கும் ஜோதிகாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஓரளவிற்கு நன்றாக அமைந்துள்ளது. இவர்களைத் தொடர்ந்து முக்கிய கேரட்டரில் நடித்துள்ள லக்ஷ்மி மஞ்சு, ஓவர் மேக்அப் என்றாலும் நேர்த்தியான கதாபாத்திரம். மற்றபடி, ராதாமோகன் குழுவில் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், மனோபாலா என அனைவரும் இப்படத்திலும் உள்ளனர்.

ஒரு சீனில் சிம்பு, இரண்டு சீன்களில் யோகி பாபு என கலக்கி செல்கின்றனர். அதிலும் சிம்பு வரும் காட்சி சூப்பர். இசை ஏ.ஆர் ரஹ்மானின் தங்கை மகன் ஏ.எச். காசிப். பாடல்கள் ஓகே ஆனால் பின்னணி இசையில் அசத்தியுள்ளார். பொன்.பார்த்திபனின் வசனங்களும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். குறைகள் என்றால் ஓரிரு காட்சிகளைத் திணித்தாற்போல் கதைக்கு ஒட்டாமல் இருக்கிறது மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை. இறுதியாக, காற்றின் மொழி, தற்போதைய பெண்களுக்கான மொழி.

7.1

Good

Story - 7
Screenplay - 7
Direction - 7
Artist - 8
Music - 7
Cinematography - 7
Editing - 7
Stunt - 7
Dance - 7
Art - 7
- 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*