மார்ச் 1 ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் காலா பட டீஸர் வெளியீடு ! காலா இசைவெளியீடு மிக விரைவில் !

மார்ச் 1 ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் காலா பட டீஸர் வெளியீடு ! காலா இசைவெளியீடு மிக விரைவில் !

மார்ச் 1 ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் காலா பட டீஸர் வெளியீடு ! காலா இசைவெளியீடு  மிக விரைவில் !

‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ளனராம்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஏற்கெனவே, ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் “படத்தின் டீசரை வருகிற மார்ச் 1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல.ல.? பாப்பீங்க!!!” என்று ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். படத்தை ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்.

காலா படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*