இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு- கதை சுருக்கம் :
படத்தின் கதாநாயகன் விமலும் ,காமெடி நடிகர் சிங்கம் புலியும் ஒரு சிறிய மருந்து கடையில் வேலை செய்கிறார்கள், அதே சமயத்தில் இரவு நேரத்தில் திருடர்களாகவும் வீடுகளில் சிறிய சிறிய பொருட்களை திருடுகிறார்கள், அவ்வாறு திருடும்போது ஒரு நாள் இருவரும் ஆளுக்கு ஐந்து லட்சத்தை எடுத்து கொண்டு தப்பி விடுகிறார்கள்.. அதன் பின் நடக்கும் சம்பவங்களால் அவர்களை
போலீஸ், ரௌடி கும்பல் மற்றும் கவர்ச்சி நடிகை மியா லியோன் துரத்துகின்றனர்…எதற்காக துரத்துகிறார்கல், இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதை.

ஹாரா ஹரா மஹதேவக்கி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ போன்று ‘இவணுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ என்பது ஒரு அடல்ட் காமெடி படமாக உள்ளது.. இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்த உடனே
பல விமர்சனுங்களுக்கு உள்ளானது. இப்படம் தற்போது திரையரங்குளில் வெளியாகி உள்ளது, படத்தில் எல்லாம் வசனங்களும் கட்சிகளும் இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், ஆபாச காட்சிகள் கொண்டதாக உள்ளது. இது ஒரு அடல்ட் காமெடி திரைப்படம். இப்படத்தை இயக்குனர் முகேஷ் இயக்கி உள்ளார், படத்தில் ஆஷா சவேரி கதாநாயகியாக நடித்து உள்ளார். நடிகர் மன்சூர் அலி கான் , நடிகை பூர்ணா மற்றும் நடிகர் ஆனந்த்ராஜ் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்து உள்ளனர். பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் தங்கை மியாராய் லியோன், விமலின் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தின் காட்சிகள் குடும்பத்தோடு பார்க்க முடியா விட்டாலும், இளம் வயதினர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும் வண்ணம் உள்ளது, படத்தில் ஆபாச காட்சிகள் அதிகமாக இருந்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை..படத்தின் ஒளிப்பதிவை கோபி ஜெகதீஸ்வரன் செய்து உள்ளார், ஒளிப்பதிவு மிகவும் நன்றாக செய்து உள்ளார். நடராஜன் சங்கரன் இசை அமைத்து உள்ளார். படத்தின் தொகுப்பாளர் தினேஷ். படத்தில் தொழில்நுட்பங்களை நன்றாக உபயோகப்படுத்தி உள்ளனர். ஆனால் படத்தின் கதைக்கும் ஆபாச காட்சிகளுக்கும் சம்மந்தம் இல்லை, வேனும் என்றே சம்மந்த படுத்தியது போன்று உள்ளது. இப்படம் இளம் வயதினரை மட்டுமே கவரும் வண்ணம் எடுக்க பட்டுள்ளது, படத்தை நகைச்சுவைக்காக மற்றும் பொழுது போக்கிற்காக கண்டிப்பாக ஒரு முறை காணலாம் ஆனால் குடும்பத்தோடு அல்ல, தனியாக….நன்றி.

6

Fair

Story - 6
Screenplay - 5
Direction - 6
Artist - 6
Music - 6
Cinematography - 6
Editing - 5
Stunt - 7
Dance - 7
Art - 6
- 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*