கதைக்கரு :

ஐ.டி இளைஞன் ஒரே நேரத்தில் வேலையையும் இழந்து சில லட்சம் கடனிலும் விழுந்து, தீவிரவாதி பட்டியலிலும் சேருகிறான். இது அத்தனையிலும் அவனது புத்திசாலிதனத்தால் அவன் எப்படி போராடி வெற்றி பெறுகிறான். என்பதே “இப்படை வெல்லும் ” படத்தின் கரு.

கதை : முதல் பெண் பேருந்து ஓட்டுனராக தேர்வாகும் ராதிகா திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக பணியில் இருக்கிறார் . இவருடைய மகனானஉதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில்
வேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மாஞ்சிமாமோகனும்,  உதயநிதியும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம், மாஞ்சிமா
மோகனின் போலீஸ் அண்ணனான ஆர்.கே.சுரேஷுக்கு  தெரியவருகிறது. உதயநிதி வேறு மதம் சார்ந்தவர் என்பதால் ஆர்.கே.சுரேஷ், மாஞ்சிமா மோகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர்களை பிரிக்கவும் முயற்சி செய்கிறார். இந்நிலையில், உதயநிதியும், மாஞ்சிமா மோகனும், பதிவு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

இதற்கிடையில், தீவிரவாதியான டேனியல் பாலாஜி வட இந்தியா மற்றும் ஆந்திராவில்
வெடிகுண்டுகளை வைத்து விட்டு, சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக வருகிறார். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக, உதயநிதியையும், தன் மனைவியின் பிரசவத்திற்கு ஊருக்கு கிளம்பும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சூரியையும்., தன் வாகன தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளுகிறார் சர்வதேச தீவிரவாதிகளின் கைகூலி டேனியல் பாலாஜி . இவர்களின் சந்திப்பு., ஆங்காங்கே , சிசிடிவி கேமராவில் பதிவாகி விட, டேனியல்பாலாஜிக்கும், உதயநிதி மற்றும் சூரிக்கும் சம்மந்தம்இருப்பதாக கருதி போலீஸ் அவர்களை கைது செய்துவிடுகிறார்கள்.
இதுதான் சமயம் என்று உதயநிதியை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இறுதியில் ஆர்.கே.சுரேஷின் என்கவுண்டரில் இருந்து தப்பித்து . ஹீரோ உதயநிதி , தனது புத்திசாலிதனத்தால் , டேனியல் பாலாஜிக்கும் தனக்கும் எந்த சம்மந்தம் இல்லை….
என்று நிருபித்தாரா? மாஞ்சிமா மோகனுடன் மணக்கோலத்தில் இணைந்தாரா? டேனியல் பாலாஜியின் திட்டத்தை தவிடு பொடியாக்கி ., தான் தப்பிப் பதோடு., எப்படி ? சென்னை மாநகரையும் டேனியல் பாலாஜியின் பாம் -பணால் திட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் காப்பாற்றுகிறார் .உதய்.? என்பது தான் “இப்படை வெல்லும்.” படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதையும் , களமும் .

கதாநாயகர் :உதயநிதி ஸ்டாலின் ஆட்குறைப்பில் வேலை இழந்த ஐ.டி இளைஞர் மதுசூதனனாகவும் , நாட்டை காக்க துடிக்கும் அப்பாவி வாலிப ராகவும் உதயநிதி வழக்கமான அவருக்கே உரிய ஸ்டைலில் தன் இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் படம்முழுக்க ஓடி ஓடி நடித்திருகின்ற அவர்., டான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மனிதர் ரொம்பவே கஷ்டப்பட்டு ஜெயித்திருக்கிறார் முதல்பாதி மாஞ்சிமா மோகனுடன், ரொமன்ஸிலும் ., இரண்டாம் பாதியில்,சூரியுடன் காமெடியிலும் கவனம் ஈர்க்கிறார் உதயநிதி.

பார்கவியாக மாஞ்சிமா மோகன்,கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார். அவர் வரும் காட்சிகள் இப்படத்தில் ரொம்பவே குறைவு என்றாலும் மாஞ்சிமா மோகன் காதல் காட்சிகளில்
சிறப்பாக நடித்திருக்கிறார்.

வில்லன் : சோட்டாவாக வரும் டேனியல் பாலாஜியும் அவரது நடிப்பும் படத்திற்கு பெரும் பலம்.

பிற நட்சத்திரங்கள் : பொல்லாத போலீஸ் ஏ.சி ஆர்.கே.சுரேஷ் , தங்கையின்
காதலுக்கு எதிரியாகவும், வில்லத்தனத்திலும் மிரட்டியிருக்கிறார். இயக்குனர் கெளரவ் , பெண்பஸ் டிரைவர் கண்மணியாக ராதிகா சரத்குமார் , பைனான்ஸியர் முருகனாக ரவி மரியா , காமெடி இன்ஸ்’ ஸ்ரீமன் , எஸ்.ஐ. ரவிக்குமார் ,ரோகிணி உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம் .

தொழில்நுட்பகலைஞர்கள் : பிரவின் கே.எல்.லின் படத்தொகுப்பில் சூரியின் காமெடிகள் இன்னும் சற்று கத்தரிக்கப்பட்டிருக்கலாம். ரிச்சர்டு எம். நாதனின் ஒளிப்பதிவில் கேமிரா கதைக்கேற்ப பரபரப்பாக ஒடிக் கொண்டே இருப்பது பலம் .

பலம் : “இப்படை வெல்லும் ‘ எனும் டைட்டிலும் .,ராதிகா மாதிரியே தேர்ந்த நடிப்பில் திரும்பி பார்க்க வைக்கும் நடிப்பை தந்திருக்கின்ற சூரியின் வயிற்று பிள்ளைக்கார மனைவியாக வரும் ரோகிணி. உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் பெரும் பலம்!

இயக்கம் :கெளரவ் நாராயணனின் எழுத்து , இயக்கத்தில் முன் பாதி மிரட்டல் . பின்பாதி உருட்டல்! காரணம் , சீரியஸாக எடுக்கப்ட்டிருக்க வேண்டிய ஒரு சப்ஜெக்ட்டை காமெடி செய்கிறேன் …. பேர்வழி…. என திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பதும், முன்கூட்டியே யூகிக்க முடியும் காட்சிகளும் … பெரும் பலவீனம்.

7.7

Good

Story - 7
Screenplay - 8
Direction - 8
Artist - 8
Music - 7
Cinematography - 7
Editing - 8
Stunt - 8
Dance - 8
Art - 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*